அறிமுகமானது வலிமை சிமெண்ட்… விலை உள்ளிட்ட விவரங்களை விளக்குகிறார் தங்கம் தென்னரசு!!

By Narendran SFirst Published Nov 16, 2021, 2:57 PM IST
Highlights

தமிழக அரசின் வலிமை சிமெண்ட் உறுதித்தன்மை வாய்ந்தது என்றும் தரத்தின் அடிப்படையில் சிமெண்ட் மூட்டை ரூ.350 மற்றும் ரூ.365 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

தமிழக அரசின் வலிமை சிமெண்ட் உறுதித்தன்மை வாய்ந்தது என்றும் தரத்தின் அடிப்படையில் சிமெண்ட் மூட்டை ரூ.350 மற்றும் ரூ.365 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கட்டுமான பொருட்களான சிமெண்ட், கம்பி, ஜல்லி, மணல் ஆகியவற்றின் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை ஏற்றத்தால் பொதுமக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் வலிமை என்ற பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்தப்படுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பட்ஜெட்டில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர புதிய ரக சிமெண்டான வலிமை சிமெண்டை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிமுகப்படுத்தி, விற்பனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூஸம் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் சிமெண்ட் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சிமென்ட் 2 தரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.350 , ரூ.365 ஆகிய இரு விலைகளில் சந்தையில் வலிமை சிமெண்ட் அறிமுகமாகியுள்ளது. இந்த சிமெண்ட் விலையுடன் கூடுதலாக ரூ 35 போக்குவரத்து செலவுக்கு வசூலிக்கப்படுகிறது. தற்போதைய மூலப்பொருட்களின் விலையின் அடிப்படையில் சிமெண்ட்டின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும்,  ஆலங்குளம் சிமெண்டு ஆலை ஆண்டு ஒன்றுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறனுடன்,  அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் 1970ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. அதை தொடர்ந்து தமிழ்நாடு  சிமெண்ட்ஸ்  கழகத்தால் அரியலூரில் ஆண்டு ஒன்றுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறனுடன் ஒரு ஆலையும் 10 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட மற்றொரு புதிய சிமெண்ட் ஆலை நிறுவப்பட்டது. இந்த மூன்று ஆலைகளும் ஆண்டொன்றுக்கு மொத்தமாக 17 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி திறன்  கொண்டவை. இது தமிழ்நாடு  சிமெண்ட்ஸ்  கழகம் என்ற பெயரில் சிமெண்ட் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர வலிமை சிமெண்ட் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்த புதிய ரக வலிமை சிமெண்ட் அதிக உறுதியும், விரைவான உலரும் தன்மையும , அதிக வெப்பத்தை தாங்கும் தன்மையும் கொண்டது. இந்த நிலையில் தமிழக அரசின் வலிமை சிமெண்ட் உறுதித்தன்மை வாய்ந்தது என்றும் தரத்தின் அடிப்படையில் சிமெண்ட் மூட்டை ரூ.350 மற்றும் ரூ.365 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசின் வலிமை சிமெண்ட் விலை தரத்தின் அடிப்படையில் ரூபாய் 350 மற்றும் ரூபாய் 365 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் அரசின் திட்டங்களுக்கும் வலிமை சிமெண்ட் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  மேலும் அம்மா சிமெண்ட் வலிமை சிமெண்ட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,  அது உங்களுடைய யூகம் என்றும் தவறான புரிதல் என்றும் குறிப்பிய்ட்டார் மேலும் அதற்கு என்னை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

click me!