மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குட் நியூஸ்… ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 நிவாரணம்!! | CM Stalin

By Narendran SFirst Published Nov 16, 2021, 2:20 PM IST
Highlights

#CM Stalin | வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆறு அமைச்சர்கள் அடங்கிய குழு மீதான ஆலோசனைக்கு பிறகு வெள்ளம் பாதித்த விவசாயிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். 

வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆறு அமைச்சர்கள் அடங்கிய குழு மீதான ஆலோசனைக்கு பிறகு வெள்ளம் பாதித்த விவசாயிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சில நாட்களாக, குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து,  பயிர்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர் சேத விவரங்களை அறியவும், அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றினை மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்தக் குழுவில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த குழு அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில், பயிர்ப்பாதிப்பு குறித்து ஆய்வு செய்தது.

இந்நிலையில் மழை, வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர்சேத விவரங்களை பார்வையிட்ட ஐ.பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சேத விவரங்கள் தொடர்பாக அறிக்கை அளித்தனர். டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு பயிர் சேதம், கால்நடை இறப்பு உள்ளிட்டவற்றை  ஐ.பெரியசாமி தலைமையில் ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை தாக்கல் செய்தனர். தஞ்சாவூர் ,திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 17 லட்சத்து 46 ஆயிரம் ஹெக்டேர் சம்பா சாகுபடி செய்துள்ள நிலையில், சுமார்  68 ஆயிரத்து 652 ஹெக்டர் விளைநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் இறப்பு, வீடுகள் சேதம் உள்ளிட்டவை குறித்தும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்கள் ஆகியவற்றை சீரமைப்பது மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆறு அமைச்சர்கள் அடங்கிய குழு மீதான ஆலோசனைக்கு பிறகு வெள்ளம் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி, அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை - கார் - சொர்ணவாரிப் பயிர்கள், முழுமையாக சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறுசாகுபடி செய்திட ஏதுவாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 6 ஆயிரத்து 38 ரூபாய் மதிப்பீட்டில் இடுபொருள்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பாதிப்படைந்த சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை சரி செய்ய 300 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

click me!