சென்னையில் 7 மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம்... மின்சாரத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 03, 2021, 05:23 PM IST
சென்னையில் 7 மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம்... மின்சாரத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு...!

சுருக்கம்

சென்னையில் 7 மருத்துவமனைகளில் தடையில்லாத மின்சாரம் வழங்குவதற்கான இரு மின் வழித்தட வசதி செய்யப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

சென்னையில் 7 மருத்துவமனைகளில் தடையில்லாத மின்சாரம் வழங்குவதற்கான இரு மின் வழித்தட வசதி செய்யப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், கோவிட் – 19 சிகிச்சை மற்றும் பிற சிகிச்சைகளுக்காக வரும் பொதுமக்கள், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்களின் நலத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி சென்னையில் கூடுதலாக 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்க இரு மின்வழித்தட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் தண்டையார்பேட்டை தொற்று நோய் அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் உள்ளது போல, தொடர் மின் சுற்று கருவி (Ring Main Unit) கீழ்கண்ட 7 மருத்துவமனைகளில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மருத்துவமனைகளில் தலா இரு மின்வழித்தடங்களில் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு மின்வழித்தடத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதிகபட்சமாக மூன்று விநாடிகளிலேயே தானாகவே (Auto Change over) தற்போது அமைக்கப்பட்டு இருக்கும் கருவியின் மூலம் மற்றொரு மின்வழித்தடத்தின் வாயிலாக மின்சாரமானது தொடர்ச்சியாக இந்த மருத்துவமனைகளில் வழங்கப்படும்.

இதன் மூலம் எவ்வித அசாதாரண சூழலிலும் தங்கு தடையில்லா மும்முனை மின்சாரம் கிடைக்கும். இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி