நாளுக்கொன்று ரிலீஸ்... கொட்டித்தீர்க்கும் அதிமுக தொண்டர்கள்... சசிகலா செம ப்ளான்..! ​

Published : Jun 03, 2021, 03:50 PM IST
நாளுக்கொன்று ரிலீஸ்... கொட்டித்தீர்க்கும் அதிமுக தொண்டர்கள்... சசிகலா செம ப்ளான்..!  ​

சுருக்கம்

இடையில் புகுந்து, தான் அந்த ஒற்றத்தலைமை பொறுப்பை ஏற்றுவிடலாம் என்றும் செயல்பட்டு வருகிறார் சசிகலா.

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆளுக்கொரு பக்கம் இருந்து அரசியல் செய்துகொண்டிருக்கும் நிலையில் சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரவேண்டிய அத்தனை பணிகளும் நடைபெற்றுவருவதாக கூறுகிறார்கள்.

ஒற்றைத்தலைமையின் கீழ் அதிமுக வர வேண்டும் என்று அக்கட்சியின் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அதையேதான் விரும்புகிறார்கள். ஆனால், அந்த ஒற்றத்தலைமை யார் என்பதலிதான் அவர்களுக்குள் போட்டா போட்டி நடந்து வருகிறது. இடையில் புகுந்து, தான் அந்த ஒற்றத்தலைமை பொறுப்பை ஏற்றுவிடலாம் என்றும் செயல்பட்டு வருகிறார் சசிகலா. அண்மையில் வெளிவந்த அவரது ஆடியோக்கள் அதைத்தான் சொல்கின்றன. ஆனால், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அதிமுகவிற்குள் சசிகலா வரமுடியாது என்று அடித்துசொல்கிறார்.

​இந்தச் சூழ்நிலையில், சசிகலா மீண்டும் அரசியலுக்கு வர உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தொண்டர்களிடம் அவர் தொலைபேசியில் பேசிய ஆடியோக்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், அரக்கோணம், செம்பேடு கிராமத்தின் அதிமுக நிர்வாகியிடம் சசிகலா பேசும் 5-வது ஆடியோ வெளியாகி உள்ளது. அதில், தொண்டர்கள் மன வருத்தத்தில் இருக்கிறாங்க. புரியுது... இந்த கொரோனா தாக்கம் முடிந்த உடன் தொண்டர்களை எல்லாம் சந்திக்க வருகிறேன். எதுக்கும் பயப்படாதீங்க. என்று ஆறுதல் சொல்லும் வகையில் ஆடியோ வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி