டாஸ்மாக் கொள்முதலில் ரூ. 1 லட்சம் கோடி ஊழலா? அவதூறு பரப்பிய கிருஷ்ணசாமி.. ஆக்‌ஷனில் இறங்கிய செந்தில் பாலாஜி.!

By vinoth kumar  |  First Published May 26, 2023, 7:24 AM IST

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில், 60 சதவீத மதுபானங்களுக்கு மட்டும் ஆயத்தீர்வை விதிக்கப்படுவதாகவும், 40 சதவீதத்துக்கு ஆயத்தீர்வை விதிக்கப்படவில்லை. 


புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு எதிராக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில், 60 சதவீத மதுபானங்களுக்கு மட்டும் ஆயத்தீர்வை விதிக்கப்படுவதாகவும், 40 சதவீதத்துக்கு ஆயத்தீர்வை விதிக்கப்படவில்லை. இதுபோன்ற முறைகேடுகளால், சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்தார்.

Latest Videos

இதையும் படிங்க;- முருகனுக்கு 2 மனைவியா? 3 மனைவியா? அமைச்சரின் பேச்சுக்கு கருணாநிதியை சுட்டிக்காட்டி தரமான பதிலடி கொடுத்த பாஜக

இந்நிலையில், கிருஷ்ணசாமிக்கு எதிராக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்;- தனக்கு எதிராக ஆதாரமின்றி கிருஷ்ணசாமி புகார் செய்துள்ளார். அந்த புகாரை கட்சியின் இணையதளத்திலும், டுவிட்டர் பக்கத்தில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்துள்ளளார். மேலும், பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார். 

இதையும் படிங்க;-  டாஸ்மாக் கொள்ளையன் பாலாஜி! பதவி நீக்கம் செய்யுங்கள்! தஞ்சை பார் மரணத்திற்கு பதில் என்ன? கிருஷ்ணசாமி ஆவேசம்.!


 
தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ள கிருஷ்ணசாமியை  அவதூறு சட்ட பிரிவின்கீழ் தண்டிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். இதுதொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரஉள்ளது.

click me!