சிங்கப்பூரில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்... கான்சாய் விமான நிலையம் வந்தடைந்தார்!!

By Narendran SFirst Published May 25, 2023, 7:53 PM IST
Highlights

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரில் தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (25.5.2023) ஜப்பான் நாட்டின் கான்சாய் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் 23.5.2023 அன்று அரசுப் முறை பயணமாக சிங்கப்பூர் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரில் தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (25.5.2023) ஜப்பான் நாட்டின் கான்சாய் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

இதையும் படிங்க: இது தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் கிடைத்த பெருமை! செங்கோல் வைக்க முடிவு செய்த பிரதமருக்கு நன்றி! வானதி..!

அவரை ஜப்பான் நாட்டின் இந்தியத் தூதர் நிகிலேஷ் கிரி அவர்கள் மலர்கொத்து வழங்கி வரவேற்றார். 26.5.2023 மற்றும் 27.5.2023 ஆகிய இரண்டு நாட்கள் ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும், ஜப்பான் நாட்டின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களையும் சந்திக்க உள்ளார். முன்னதாக சிங்கப்பூரில்  Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களையும், சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்  எஸ். ஈஸ்வரன் அவர்களையும் சந்தித்து, இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும் பேசினார். 

இதையும் படிங்க: உணவகத்தை அபகரித்து பாஜக சேவை மையம் தொடங்கிவிட்டனர்.! அண்ணாமலை மீது போலீசில் புகாரளித்த மாஜி நிர்வாகி

மேலும் புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் உரையாடியதோடு, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்த்திடும் வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.

click me!