நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நாள் துக்க தினமாக அனுசரிக்கப்படும்... திருமாவளவன் கருத்தால் பரபரப்பு!!

By Narendran S  |  First Published May 25, 2023, 11:45 PM IST

நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நடைபெறும் தேதி துக்க தினமாக அனுசரிக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நடைபெறும் தேதி துக்க தினமாக அனுசரிக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் கூட்டணி என்பது வேறு, மக்கள் நலன் சார்ந்த போராட்ட களம் என்பது வேறு. மக்கள் நலனுக்காக ஆளுங்கட்சிக்கு எதிரான இயக்கங்களுடன் இணைந்து போராடுவோம். மதுவிலக்கு தொடர்பாக அதிமுக போராட்டம் நடத்தினால் இணைந்து போராட தயார். தேர்தல் உறாவை பொறுத்தவரை திமுக, காங்கிரஸ்டனான கூட்டணி தொடர்கிறது. நாடாளுமன்றம் திறக்கும் நாளை விசிக சார்பில் துக்க நாளாக அனுசரிப்போம்.

இதையும் படிங்க: உணவகத்தை அபகரித்து பாஜக சேவை மையம் தொடங்கிவிட்டனர்.! அண்ணாமலை மீது போலீசில் புகாரளித்த மாஜி நிர்வாகி

Latest Videos

அன்று விசிக உறுப்பினர்கள் அனைவரும் கருப்புச்சட்டை அணிய உள்ளோம். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கவும் விசிக முடிவு செய்துள்ளது. வரும் 28 ஆம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சாவார்கர் பிறந்தநாளில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறக்கப்படுவதை கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அனைவரும் அவரவர் வீட்டில் கருப்பு கொடி ஏற்றி கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்... கான்சாய் விமான நிலையம் வந்தடைந்தார்!!

முழுமையான மது விலக்கு கோரி ஜூன் 2வது வாரம் அறப்போராட்டம் நடத்தவுள்ளோம். ஆளும் கட்சிக்கு எதிரான இயக்கங்களுடன் இணைந்து போராடவும் தயார்.செங்கோலில் மதம் சார்ந்த அடையாளம் இருந்தால் அது அரசமைப்புக்கு எதிரானது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசமைப்பு சட்டத்தின் பக்கம் நிற்கிறோம். பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் மூவர்ணக்கொடி இருக்காது, காவிக்கொடி தான் தேசிய கொடியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.  

click me!