ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் சேகர்பாபு அவரது மனைவி..!

By vinoth kumarFirst Published Dec 9, 2022, 12:22 PM IST
Highlights

கடந்த நவம்பர் 16ம் தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்தத வண்ணம் உள்ளது.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அவரது மனைவி சபரிமலையில் சாமி தரிசனம் செய்தார். 

கடந்த நவம்பர் 16ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்தத வண்ணம் உள்ளது. தினமும் சராசரியாக 65 முதல் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

இதையும் படிங்க;- சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்.. மாற்று வழி இதுதான் ! தேவசம்போர்டு அறிவிப்பு

வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மண்டல, மகர விளக்கு பூஜை நெருங்குவதையொட்டி வரும் நாட்களில் கூட்டம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

இந்நிலையில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அவரது மனைவி சபரிமலையில் நடந்த தீபாராதனை நிகழ்ச்சியில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்த அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. 

இதையும் படிங்க;-  சிதம்பரம் நடராஜர் கோயில் ஒன்றும் தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல.. கணக்கு கேட்டா சொல்லணும்! அமைச்சர் சேகர்பாபு

click me!