பசி மயக்கத்தில் இப்படியா பேசுவாங்க !! அமைச்சரின் பேச்சால் கடுப்பான அமைச்சர் !!

Selvanayagam P   | others
Published : Jan 10, 2020, 08:10 AM IST
பசி மயக்கத்தில் இப்படியா பேசுவாங்க !!  அமைச்சரின்  பேச்சால் கடுப்பான அமைச்சர் !!

சுருக்கம்

அமைச்சர் ஜெயக்குமாரின் பெயரையும், அவரது துறையையும், விழாவில் கலந்து கொண்டு பேசிய சக அமைச்சரான சரோஜா மாற்றி, மாற்றி கூறியது  பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சமுதாயநலக்கூடத்தில் அரசு சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா உள்ளிட்டோரும், அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 

விழாவில் பேசிய அமைச்சர் சரோஜா, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் என்பதற்கு பதிலாக , மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் ஜெயக்குமார் என தவறுதலாக கூறிவிட்டு பின்னர் சுதாரித்துக்கொண்டு தவறை திருத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர்  , அமைச்சர் ஜெயக்குமார் என்பதற்கு பதிலாக ஜெயராமன் என மீண்டும் தவறுதலாக கூறினார். இதனைக் கேட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவரும் சிரித்தனர். 

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார், "பசி மயக்கமா" என கேட்க, அமைச்சர் சரோஜாவும் "ஆம் பசி" என பதிலளிக்க அரங்கில் சிரிப்பலை எழுந்தது.

அதே சமயம், அமைச்சராக இருக்கும் சரோஜாவுக்கு, சக அமைச்சரின் பெயரும், துறையும் கூட தெளிவாக தெரியவில்லையே என விழாவில் கலந்து கொண்டவர்கள்  கடுப்பாகினர்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி