நீதிபதி லோயா மரண சர்ச்சை... மறுவிசாரணை செய்ய மகாராஷ்டிரா அரசு அதிரடி முடிவு... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

Published : Jan 10, 2020, 07:20 AM IST
நீதிபதி லோயா மரண சர்ச்சை... மறுவிசாரணை செய்ய மகாராஷ்டிரா அரசு அதிரடி முடிவு... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

சுருக்கம்

இந்த வழக்கிலிலிர்ந்து அமித் ஷா உள்பட 22 போலீஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.  இந்த வழக்கை தொடக்கத்தில் விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா 2014-ல் நண்பரின் இல்ல திருமணத்தில் பங்கேற்க நாக்பூர் சென்றார். அந்த நிகழ்வில் மாரடைப்பால் லோயா மரணம் அடைந்தார். ஆனால், அவருடைய மரணத்தில் சந்தேகம் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அப்போது இந்த வழக்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   

அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீதிபதி லோயா மரணம் குறித்து மறு விசாரணை செய்யப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. 
பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி 2005-ம் ஆண்டில் சொராபுதீன் சேக் என்பவரை குஜராத் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் என்கவுண்ட்டரில் கொன்றனர். இதேபோல அவருடைய மனைவி கவுசர், வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட சொராபுதீன் சேக்கின் உதவியாளர் துல்சிராம் பிரஜாபதி ஆகியோரும் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர்.  ஆனால், இது போலி என்கவுண்ட்டர் என்றும் அப்போது குஜராத்தில் அமைச்சராக இருந்த தற்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது.


பின்னர் இந்த வழக்கிலிலிர்ந்து அமித் ஷா உள்பட 22 போலீஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.  இந்த வழக்கை தொடக்கத்தில் விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா 2014-ல் நண்பரின் இல்ல திருமணத்தில் பங்கேற்க நாக்பூர் சென்றார். அந்த நிகழ்வில் மாரடைப்பால் லோயா மரணம் அடைந்தார். ஆனால், அவருடைய மரணத்தில் சந்தேகம் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அப்போது இந்த வழக்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
இதுதொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதி லோயா இயற்கையாகவே மரணம் அடைந்ததாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. அத்தோடு இந்த விவகாரம் முடிவுக்கு வந்தாலும், லோயா மரணம் பற்றிய சர்ச்சை தொடர்ந்து நீடித்து வந்தது.

 
இந்நிலையில் மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி ஏற்ற நிலையில், மாநில உள்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான அனில் தேஷ்முக் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் நீடிக்கிறது எனவும் வழக்கை மறுவிசாரணை நடத்தக்கோரியும் என்னை சந்தித்து சிலர் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் தேவைப்பட்டால் இந்த வழக்கு மறு விசாரணை செய்யப்படும்” என்றார். ஆனால், நீதிபதி லோயா குடும்பத்தினர் இந்தக் கோரிக்கையை வைத்தார்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்க அமைச்சர் தேஷ்முக் மறுத்துவிட்டார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!