அஜித் 'தல', ரஜினி 'மலை' அடுத்த பரபரப்பை கிளப்பிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published : Feb 15, 2020, 08:34 PM IST
அஜித் 'தல', ரஜினி 'மலை'  அடுத்த பரபரப்பை கிளப்பிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சுருக்கம்

அஜித், ரஜினி இவர்கள் இருவரும் ஜல்லிக்கட்டுக் காளைகள் எனவும் அஜித் 'தல': ரஜினி 'மலை' எனவும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

T.Balamurukan

அஜித், ரஜினி இவர்கள் இருவரும் ஜல்லிக்கட்டுக் காளைகள் எனவும் அஜித் 'தல': ரஜினி 'மலை' எனவும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.


அஜித் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாதுறையில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துக்கொண்டவர்.என்பதால், அஜித் படங்கள் எம்ஜிஆர் படங்கள் பார்ப்பதில் தீவிரமாக இருப்பார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.விருதுநகரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்கள். அதில்,; அதிமுக ஆட்சியின் கடைசி பட்ஜெட் அல்ல; இது அடுத்த ஐந்தாண்டுக்கான முதல் பட்ஜெட்; இந்த பட்ஜெட் யாருக்கும் வரியில்லாத பட்ஜெட். யாரையும் பாதிக்காத பட்ஜெட். இந்த பட்ஜெட் பட்டான, முத்தான பட்ஜெட்.கமல்ஹாசன் பட்ஜெட் போடட்டும் அதை பார்த்துவிட்டுத்தான் அவரின் கருத்தை ஏற்கலாமா?, என்பதை முடிவு செய்ய முடியும். அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை.


விஜய் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது ஒன்றும் தவறில்லை. அதிமுகவினர் வீட்டுகளில் கூடத்தான் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சோதனை நடக்கிறது. வருமானவரித்துறை தன்னாட்சி பெற்ற அமைப்பு. இதில் அரசியல் தலையீடு கிடையாது. ரஜினிக்கு நிகராக இப்போதுள்ள எந்த நடிகரும் கிடையாது. ரஜினிக்கு இணையான நடிகர் என்றால் அஜித் ஒருவர் தான். இருவரும் ஜல்லிக்கட்டு காளைகள் அஜித் தல ரஜினி மலை மீண்டும் தமிழக அரசியலை கலகலப்பாகியிருக்கிறார்.


 

PREV
click me!

Recommended Stories

திரும்பத் திரும்ப அவமானம்..! பாஜக சவகாசமே வேண்டாம்..! ஓ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு..!
உங்கள் மிரட்டலுக்கு திமுக தலைமை அல்ல... தொண்டன் கூட பயப்பட மாட்டான்..! துணைக்கு கூட்டம் சேர்க்கும் உதயநிதி