தளபதி விஜய் அரசியலுக்கு வருவது உறுதி!: அப்பா சந்திரசேகரனே சொல்லிட்டாரு! அப்புறமென்ன?

Vishnu Priya   | Asianet News
Published : Feb 15, 2020, 06:49 PM IST
தளபதி விஜய் அரசியலுக்கு வருவது உறுதி!: அப்பா சந்திரசேகரனே சொல்லிட்டாரு! அப்புறமென்ன?

சுருக்கம்

பா.ஜ.க.வுக்கும் விஜய்க்கும் இடையில் எந்த மோதலுமில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் இது பற்றி தவறான கருத்துக்களைப் பரப்புகிறார்கள். 

தென்னிந்திய சினிமாவில் இருந்து கொண்டு, அரசியலுக்கே வராமல் தேசிய அளவில் அரசியல் பரபரப்புக்கு ஆளானவர் என்றால் அது ரஜினிகாந்த் தான். ஆனால் அதை முறியடித்திருக்கிறார் விஜய். பல ஆண்டுகளாக அரசியலில் எதிர்பார்க்கப்பட்டு, பல வருடங்களாக அரசியலை தொட்டுப் பேசி,  இரண்டு வருடங்களுக்கு முன்பாக தன் ‘அடுத்த சட்டமன்ற தேர்தலின் போது கட்சி துவங்குவேன்’ என அறிவித்து, கடந்த சில மாதங்களாக கடும் அரசியல் விவாதங்களுக்கு ஆளாகி, கடந்த சில வாரங்களாக அரசியல் சர்ச்சைகளை கிளப்பிவிட்டு....என்று இப்படி ரஜினிகாந்த் செய்த பல மாயங்களை, ஜஸ்ட் ஒரு ரெய்டுக்கு ஆளானதன் மூலம் ஒரே வாரத்தில் முறியடித்துவிட்டார் விஜய். 

ஆம் நேஷனல் லெவல் பாலிடிக்ஸே விஜய்யை பேச துவங்கியுள்ளது. இதன் மூலம் அவரது படங்களுக்கு பக்கா பப்ளிசிட்டி கிடைத்துள்ளது என்பதுதான் நுட்பம். விஜய் மீது ரெய்டு பாய்வதற்கு, அவரது அரசியல் ஆசைதான் காரணம்! என்று சொல்லப்படுகிறது. அதிலும் விஜய்யின் அப்பா ‘என் மகன் நிச்சயம் அரசியலுக்கு வருவார்’ என்று எங்கோ, என்றோ சொன்னதை பிடித்துக்  கொண்டுதான் அவர் மீது ரெய்டை பாய்ச்சியுள்ளனர் என்றனர். ரெய்டுக்குப் பின் விஜய் மெளனமாவார் என எதிர்பார்க்கப்பட, அவரோ ‘என் பின்னாடி இருக்கும் கூட்டத்தைப் பாருங்க பாஸ்’ என்றபடி பின்னி எடுக்க துவங்கிவிட்டார். இந்த நிலையில் விஜய்யின் அப்பா மீண்டும் தன் மகனின் அரசியல் வருகையை உறுதிப்படுத்தியிருக்கிறார். இது குறித்த தனது சிறிய பேட்டியொன்றில் “கொஞ்சம் கொஞ்சமாக தலைமை பண்புக்கு தயாராகி வருகிறார் விஜய். அவர் அரசியலுக்கு வருவது உறுதி. ஆனால் அதற்கான காலம், நேரம் இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை. வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. 

பா.ஜ.க.வுக்கும் விஜய்க்கும் இடையில் எந்த மோதலுமில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் இது பற்றி தவறான கருத்துக்களைப் பரப்புகிறார்கள். நான் கூட தேர்தலில் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறது. அது தவறானது. அப்படியொரு எண்ணம் இதுவரையில் எனக்கு இல்லை.” என்றிருக்கிறார். அப்படின்னா இனிமேல் வருமா தளபதியின் தகப்பனாரே!?

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..