சின்னம்மா சசிகலா விடுதலை ஆக வேண்டும் என்பது என் சொந்த விருப்பம்: ரகளை அடங்காத ராஜேந்திர பாலாஜி!

By Vishnu PriyaFirst Published Feb 15, 2020, 6:46 PM IST
Highlights

அ.தி.மு.க.வை நடுங்க வைக்கின்ற எதிரிகளும், அதன் ஆணிவேரை ஆட்டி அசைக்கின்ற வைரிகளும் வேறு எங்கும் இல்லை, அதன் அமைச்சரவையிலேதான் இருக்கிறார்கள். 

அ.தி.மு.க.வை நடுங்க வைக்கின்ற எதிரிகளும், அதன் ஆணிவேரை ஆட்டி அசைக்கின்ற வைரிகளும் வேறு எங்கும் இல்லை, அதன் அமைச்சரவையிலேதான் இருக்கிறார்கள். அந்த சில நபர்களின் வாய் வன்மையாலேயே அக்கட்சி மண்ணைக் கவ்வப்போவது எதிர்வரும் தேர்தலில் நடக்கப் போகிறது! என்று அரசியல் விமர்சகர்கள் நெத்தியடியாக பதிவுகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆளுங்கட்சி அமைச்சரவையில் இருந்து கொண்டு அதிரடியாக கருத்துக்களைப் போட்டுப் பொளந்து, தலைமையை தலைதெறிக்க வைக்கும் அமைச்சர்கள் என்றால் அது ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர்தான். 

இந்த லிஸ்டிலேயே வராத ஆனால் இவர்கள் எல்லோரையும் விட ஒரு படி மேலே நிற்பவர்தான் பால் வளத்துறை அமைச்சராஜ ராஜேந்திர பாலாஜி. அவரது தடால்புடால் ஸ்டேட்மெண்டுகளால் கட்சியின் வளர்ச்சியில் பால் ஊற்றப்பட்டுவிடுமோ!? என்று தலைமையும், மற்ற நிர்வாகிகளும் பயந்து நடுங்குகின்றனர். அதனால்தான் ‘சாமி தயவு செஞ்சு அமைதி காக்கவும்!’ என்று சொல்லியும் அவர் மாறவில்லை. சில நாட்களுக்கு முன்பு கூட சசிகலாவுக்கு ஆதரவான ஒரு ஸ்டேட்மெண்டை தட்டிவிட்டு, கட்சியை கதற வைத்தார். இந்த நிலையில் தன் செயல்களுக்கும், பேச்சுக்கும் விளக்க அடி கொடுத்து வீங்க வைத்திருக்கிறார் இப்படி....

“விருதுநகர் மாவட்டம் அ.தி.மு.க.வின் இரும்புக் கோட்டை. அதை யாராலும் அசைக்க முடியாது. எங்கள் இயக்கம்தான் ஜெயிக்கும். 
சின்னம்மா சசிகலா விடுதலையாக வேண்டும், சிறையிலிருந்து வெளி வர வேண்டும்! அப்படிங்கிறது என்னோட  தனிப்பட்ட கருத்து, சொந்த விருப்பம். ஆனால் அதே நேரம் என்னை ஆளாக்கியது அ.தி.மு.க.தான். அக்கட்சிக்கு எந்த பாதகமும் வரக்கூடாதுன்னு நினைப்பவன் நான். அதனால்தான் அ.ம.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளான மாஜி அமைச்சர் இன்பத்தமிழன் உள்ளிட்டவங்களை மீண்டும் தாய்க்கழகத்துக்குள் இழுத்து வந்தேன். இதெல்லாம் கட்சியின் நலனுக்காக நான் செய்திருக்கும் பணிகள். அ.ம.மு.க.வை இம்மாவட்டத்தில் வலுவிழந்து வீழ வைத்திருக்கும் என் மேலே மோசமான விமர்சனம் வைப்பது எப்படி சரியாகும்?” என்று கேட்கிறார். நீங்க சொன்னா சரிதான் அமைச்சரே!
 

click me!