பாலில் கலப்படம் செய்வதாக சிபிஐ விசாரணை கோரி வழக்கு - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரவேற்பு

First Published Jun 2, 2017, 12:01 PM IST
Highlights
minister rajendra balaji case against private milk


தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து  சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் சூரியப் பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக பால்வளத்துறை அமைச்சரே தனியார் பால் நிறுவனங்கள் பாலில் ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதாக கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

பால் கெடாமல் இருக்க ஹைட்ரஜன் பெராக்சைட், குளோரின் கலக்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் இதை தடுக்க வேண்டிய தமிழக அரசு அமைதியாக இருப்பதாகவும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் உத்தரவிட்டுள்ளதையும் அவர்  சுட்டிக்காட்டியிள்ளார்.

மனித வாழ்வில் உணவு பழக்கத்தில்  பால் என்பது முக்கிய பங்கு வகிப்பதாகவும் எனவே பால் கலப்படம் செய்வது தொடர்பாக சிபிஐ விசாரணை க்கு உத்தரவிட வேண்டும் என்றும் சூரிய பிரகாசம் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு முதன்மைஅமர்வு முன்பு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது....
 

click me!