அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு..!

Published : Mar 21, 2019, 10:23 AM IST
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு..!

சுருக்கம்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர், ரமேஷ், 48. இவர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம், அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வேலை முடிந்து, வீட்டிற்கு செல்வதற்கு சென்ட்ரல் வந்தார். 

அப்போது சென்ட்ரல் ரயில் நிலைய நுழைவாயில் அருகில் நடந்து வந்தபோது, எதிரில் அசுரவேகத்தில் வந்த ஆட்டோ, அவர் மீது மோதியது. இதில் ரமேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி ரமேஷ் நேற்று உயிரிழந்தார். 

இதுதொடர்பாக யானைகவுனி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அண்ணாமலை என்ற நாயின் வாலை நிமிர்த்த முடியாது.. நான் மோடிக்கு விசுவாசமானவன்.. திடீரென பொங்கிய அண்ணாமலை
தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!