பசையுள்ள பார்ட்டிகளுக்கு மட்டும்தான் சீட்..! கமல் கட்சி வேட்பாளர் தேர்வின் பின்னணி..!

By Selva KathirFirst Published Mar 21, 2019, 9:56 AM IST
Highlights

மக்கள் நீதி மையம் கட்சி வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ள வேட்பாளர்களில் பாதிக்கும் மேலானவர்கள் தொழிலதிபர்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் நீதி மையம் கட்சி வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ள வேட்பாளர்களில் பாதிக்கும் மேலானவர்கள் தொழிலதிபர்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

ஊழலை ஒழிப்போம் நேர்மையான நிர்வாகத்தை கொடுப்போம் என்கிற முழக்கத்துடன் கமல் கட்சி ஆரம்பித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஆகவேண்டும் என்கிற சூழலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இணைய கமல் ஆர்வம் காட்டினார். ஆனால் கமலை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதில் திமுகவிற்கு விருப்பமில்லை. இதனால் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க கமல் முயற்சி மேற்கொண்டார். அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. 

இதனால் நாடாளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிட்டே ஆக வேண்டிய நிலைக்கு கமல் தள்ளப்பட்டார். இந்த இக்கட்டான சூழலில்தான் கமல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். முதற்கட்டமாக வெளியாகியுள்ள வேட்பாளர் பட்டியலில் சுமார் 10 பேர் தொழிலதிபர்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை வேட்பாளர் அதிக பசையுள்ள பார்ட்டி என்று சொல்கிறார்கள். இதேபோல் கொங்கு மண்டலத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் ஆகி உள்ளவர்களும் தொழிலதிபர்களை என்று கூறுகிறார்கள். வழக்கறிஞர் டாக்டர் போன்றவர்களுக்கும் கமல் சீட் கொடுத்துள்ளார். 

ஆனால் இவர்களும் கூட பசையுள்ள பார்ட்டிகள் என்பதால்தான் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மையம் கட்சியில் உள்ளவர்களைத் கிசுகிசுக்கிறார்கள். இது குறித்து மக்கள் நீதி மையம் தரப்பில் கேட்டபோது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 70 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

அப்படி இருக்க வழி 70 லட்சம் ரூபாய் செலவு செய்யும் வகையிலான நபர்களை தானே தேர்ந்தெடுத்த வேட்பாளராக அறிவிக்க முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர். எது எப்படியோ மக்கள் நீதி மையம் கட்சியும் மற்ற கட்சிகளைப் போன்று பகட்டான ஒரு கட்சியாக இருந்து விடக்கூடாது என்பதே அனைவரது எதிர்பார்ப்பு

click me!