10.5 சதவீதம் என குறைவாக பாமக தனி இட ஒதுக்கீடு கேட்பது ஏன்.? பாமகவிற்கு ராஜகண்ணப்பன் கேள்வி

By Ajmal Khan  |  First Published Feb 22, 2024, 8:08 AM IST

ஏற்கனவே வன்னியர்கள் 10.5 சதவீதத்திற்கும் அதிகமாக அரசு பணி,கல்வியில் பிரதிநிதிதுவம்  பெற்றிருக்கும் நிலையில் 10.5 சதவீதம் என  குறைவாக பாமக  தனி   இட ஒதுக்கீடு கேட்பது ஏன் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கேள்வி எழுப்பியுள்ளார். 
 


சாதி வாரி கணக்கெடுப்பு

தமிழக சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கை பொது விவாதத்தின் மீது பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி உரையாற்றினார். அப்போது, 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாக்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 9 ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு இன்று நடைமுறையில் உள்ளது என்றும் மற்ற மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Latest Videos

undefined

எனவே தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு கட்டாயம் தேவை என கூறினார். இதற்கு விளக்கமளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், மற்ற மாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுத்தார்கள் ஆனால் என்ன செய்தார்கள் என்பதை நீங்கள் சொல்ல வேண்டும். எடுத்தார்கள் அப்படியே அது உள்ளது.

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு

நமது முதலமைச்சரும் ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிரானவர் இல்லை. ஜாதி வாரி கணக்கெடுப்பு தேவை என பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார் என கூறினார். தொடர்ந்து பேசிய ஜி கே மணி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம் ஆனால் அவர்கள் எடுக்க போவதில்லை. மாநில அரசுக்கு எடுக்க அதிகாரம் இருக்கும் நிலையில் ஏன் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.  மேலும் வன்னியர்களுக்கு  10.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்து பேசினார்,

குறைவாக இடம் ஒதுக்கீடு கேட்படது ஏன்.?

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன், ஏற்கனவே அரசு பணிகளில் வன்னியர்கள்  12.5 சதவீதம் இருக்கிறார்கள், கல்லூரிகள் சேர்க்கையில் வன்னியர்கள் அதிக அளவில்  இருக்கிறார்கள்,துணை ஆட்சியர்களில் 11.5 சதவீதம் வன்னியர்கள் பணியில் இருக்கிறார்கள். பிறகு ஏன் குறைவாக  10.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள் ஜி கே மணிக்கு கேள்வி எழுப்பினார்.பாரதி தாசன் ஆணையம் மூலமாக ஒவ்வொரு சாதியினரும் கல்வி,வேலை வாய்ப்பில் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என  தரவுகள் திரட்டப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கண்ணப்பன் குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்

மக்களவைத் தேர்தல் 2024: திமுகவில் யாருக்கு எம்.பி. சீட்? யாருக்கு கிடையாது?
 

click me!