குமரியில் கனரக லாரிகள் இயக்க நேரம் அறிவிப்பு! இது பத்தாது! கட்டுப்பாட்டை இன்னும் கடுமையாக்குங்கள்!விஜய் வசந்த்

By vinoth kumar  |  First Published Feb 22, 2024, 7:53 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள சாலை விபத்துக்கள் மற்றும் அதன் காரணம் ஏற்படும் மரணங்களையும் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்து கூறினேன். இந்த சாலை விபத்துக்கள் பெரும்பாலும் கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் ஏற்படுவதை சுட்டி காட்டினேன். 


கன்னியாகுமரி மாவட்டத்தின் சாலைகளில் கனரக வாகனங்கள் இயங்க மாவட்ட நிர்வாகம் விதித்த கட்டுப்பாட்டை இன்னும் கடுமையாக்க வேண்டும் என எம்.பி.விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.  விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள சாலை விபத்துக்கள் மற்றும் அதன் காரணம் ஏற்படும் மரணங்களையும் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்து கூறினேன். இந்த சாலை விபத்துக்கள் பெரும்பாலும் கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் ஏற்படுவதை சுட்டி காட்டினேன். 

Latest Videos

இதையும் படிங்க: உங்களுக்கு 24 மணிநேரம் தான் டைம்.. அதுக்குள்ள மன்னிப்பு கேட்கணும்.. ஏ.வி. ராஜூக்கு வெங்கடாச்சலம் நோட்டீஸ்!

மேலும் நான் செல்லுமிடமெல்லாம் மக்கள் இதனை குறித்து புகார் தெரிவிப்பதையும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தேன். எனவே கனரக வாகனங்களை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்க கூடாது என கோரிக்கை வைத்தேன். இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக உறுதி அளித்தார். 

இதையும் படிங்க:  நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. கட்சியை பலப்படுத்த அதிரடி முடிவு எடுத்த பிரேமலதா விஜயகாந்த்.!\

அதன் பின்னர் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் கனரக வாகனங்கள் இயங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவு வெளியிட்டது. இதனை நான் நன்றியுடன் வரவேற்கிறேன். ஆனால் இந்த கட்டுப்பாட்டை இனியும் கடுமையாக்க வேண்டும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த கட்டுப்பாட்டை நீட்டிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். 

click me!