டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஊழல்.. பகீர் கிளப்பிய எடப்பாடி.! உண்மையா.? பிடிஆர் சொன்ன விளக்கம்

Published : Mar 27, 2023, 12:25 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஊழல்.. பகீர் கிளப்பிய எடப்பாடி.! உண்மையா.? பிடிஆர் சொன்ன விளக்கம்

சுருக்கம்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நில அளவர் மற்றும் வரைவாளர் தேர்வில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 700 பேருக்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒரு தேர்வு மையத்தில் இத்தனை பேர் தேர்ச்சி பெற்றிருப்பது முறைகேடுகள் நடத்திருக்கலாம் என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  நடத்திய குரூப் 4 தேர்வு தொடர்பாக  சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.

இதையும் படிங்க..Group 4 Cut off : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு ரிலீஸ் - கட் ஆஃப் மார்க் எவ்வளவு தெரியுமா? முழு விபரம்

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தென்காசியில் ஒரு தனியார் மையத்தில் பயிற்சி பெற்ற 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள், தேர்வு எழுதியவர்களில் இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் உரிய விசாரணை நடத்தி தவறு ஏதேனும் நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

இதை அடுத்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், “டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஊழல்கள் நடைபெற்று இருப்பதாக எந்தவித ஆதாரம் இன்றி  எதிர்க்கட்சி தலைவர்  பேசி இருக்கிறார். எனவே அந்த சொற்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் இந்த அவையிலே நிரூபிக்க வேண்டும்” என்று கூறினார்.

பிறகு டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து விளக்கம் அளித்தார் நிதி அமைச்சர் பிடிஆர். “டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு தொழில்நுட்பத் தகுதி அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் மொத்தமே 397 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தென்காசியில் 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர் தவறாக விளம்பரம் செய்துள்ளார். இதற்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளில் இதுபோன்று தேர்ச்சி பெற்றவர்கள் உள்ளனரா என்று ஒப்பிட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க..Gold Rate Today : மீண்டும் குறைந்த தங்க விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி - எவ்வளவு தெரியுமா?

இதையும் படிங்க..நாடாளுமன்றத்தில் கருப்பு சட்டை.. எல்லாமே போச்சு.!! எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து செய்த தரமான சம்பவம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!