கீழமை நீதிமன்றங்களில் மத்திய அரசு தலையிடுவதாக தெரிவித்துள்ள திருமாவளவன், ராகுல்காந்தி பதவி பறிப்பு சம்பவம் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி பதவி பறிப்பு
தேர்தல் பிரச்சாரத்தில் மோடியை விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு தண்டனை வழங்கியது. மேலும் 30 நாட்களில் மேல் முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கியது. இந்த நிலையில் வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலாளர் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அறிவித்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்திய பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. மேலும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடும் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கனும்
இன்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளேன். ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. 1860 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தின் வரலாற்றில் கிரிமினல் அவதூறு வழக்கில் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாவது வழக்கு இதுவாகும். திரு ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கும் ஆளும் கட்சியின் எண்ணம் இதில் தெளிவாகத் தெரிகிறது.
பதவி பறிப்பு விவகாரம்: இன்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளேன். அதில் :
“ ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. 1860 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தின் வரலாற்றில் கிரிமினல்… pic.twitter.com/8lnG7bs4fV
எந்த அடிப்படையும் இல்லாமல் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது, கீழமை நீதிமன்றங்களில் அரசு தலையிடுவதை இது வெளிப்படுத்துகிறது. இந்த அவசர முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தை விவாதிக்க சபையின் மற்ற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
பாஜகவை தனிமை படுத்த வேண்டும்..! ராகுல் காந்தி பதவி பறிப்பு கோழைத்தனமான செயல்-ஜவாஹிருல்லா ஆவேசம்