கல்லூரி இல்லாத தொகுதியில் புதிய அரசு கல்லூரி..!சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

By Ajmal KhanFirst Published Jan 13, 2023, 11:53 AM IST
Highlights

எந்த தொகுதியில் அரசு கல்லூரி இல்லையோ அந்த தொகுதியில் முன்னுரிமை அடிப்படையில் அரசு கலைக்கல்லூரிகள் அமைக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

செங்கத்தில் அரசு கல்லூரி

தமிழக சட்டமன்ற கூட்டத்தில் இறுதிநாளான இன்று கேள்வி நேரம் நடைபெற்றது. அதில் பல்வேறு துறை தொடர்பான கேள்விக்களுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது செங்கம் தொகுதியில் புதிதாக அரசு கலைக்கல்லூரி அமைப்பது குறித்து சட்டமன்ற உறுப்பினர் கிரி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, அனைத்து சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதிக்கு கல்லூரி வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரையிலும் 8 தொகுதி இருக்கிறது 8 அரசு கல்லூரிகள் வேண்டும் என்று கேட்கிறார்கள் 3  கல்லூரிகள் ஏற்கனவே இருக்கிறது.

ஆளுநர் விருந்தில் கலந்து கொண்ட ஓபிஎஸ்-இபிஎஸ்..! சட்டப்பேரவையில் ஸ்டாலின் பதிலுரையை புறக்கணிப்பு.?

முன்னுரிமை அடிப்படையில் கல்லூரி

செங்கத்தில் மட்டும் 4 சுயநிதி கல்லூரிகள் இருக்கிறது என்றார். மேலும், மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து தான் கல்லூரிகள் புதிதாக அமைக்கப்படும் என்றார். மேலும், எந்த தொகுதியில் அரசு கல்லூரி இல்லையோ அந்த தொகுதியில் முன்னுரிமை அடிப்படையில் அரசு கலைக்கல்லூரிகள் அமைக்கப்படும் எனவும் அரசின் நிதிநிலையை அறிந்துக்கொண்டு கேட்க வேண்டும் என்றார். திருவண்ணாமலை மாவட்டம் தான் கல்வியில் பின் தங்கிய மாவட்டம், செங்கம் சட்டமன்றத் தொகுதியில் பிற தொகுதியைப் போல் பார்க்காமல் செங்கம் தொகுதிக்கு கல்லூரி அறிவிக்க வேண்டும் சட்டமன்ற உறுப்பினர் கிரி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி,

மாணவர்கள் எண்ணிக்கை பொறுத்து கல்லூரி

முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, மாணவர்கள் எண்ணிக்கையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுயநிதி கல்லூரிகளை விட அரசு கல்லூரிகளை விரும்புகிறார்கள் என்பது உண்மை என்றார். மேலும், செங்கம் தொகுதிக்கு  வருங்காலத்தில் அரசின் நிதிநிலை அறிக்கை ஏற்ப இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார்.

இதையும் படியுங்கள்

ஆன்லைன் சூதாட்டத்தால் பொறியாளர் சாவு..! 41 பேர் பலியாகியும் ஆளுனரின் மனம் இரங்கவில்லையா? - அன்புமணி கேள்வி

click me!