ஆன்லைன் சூதாட்டத்தால் பொறியாளர் சாவு..! 41 பேர் பலியாகியும் ஆளுனரின் மனம் இரங்கவில்லையா? - அன்புமணி கேள்வி

By Ajmal KhanFirst Published Jan 13, 2023, 11:02 AM IST
Highlights

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து மேலும் ஒரு பொறியாளர் தற்கொலை செய்து கொண்டநிலையில், இதுவரை 41 பேர் பலியாகியும் ஆளுனரின் மனம் இரங்கவில்லையா? என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளா்.
 

ஆன்லைன் சூதாட்டம்- தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தூத்துக்குடியை சேர்ந்த பொறியாளர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தூத்துக்குடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3.5 லட்சம் பணத்தை இழந்த பாலன் என்ற பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் கடந்த 03.08.2021-இல் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 41 ஆவது தற்கொலை இதுவாகும்.

அதிமுகவை உடைத்து அசிங்கமான தலைவராகிவிட்டார் இபிஎஸ்.! இப்போதும் கட்சி இணைப்புக்கு ஓபிஎஸ் தயார்-புகழேந்தி அதிரடி

சூதாட்டம்- 41 பேர் தற்கொலை

கடந்த 3 நாட்களில் இரு இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை கொண்டது  பெரும் சோகமாகும்!தந்தைக்கு அனுப்ப வேண்டிய ரூ.50 ஆயிரத்தை ஆன்லைனில் சூதாடி இழந்தது தான் பாலனின் தற்கொலைக்கு காரணம். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களால் அதிலிருந்து மீள முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது.

தூத்துக்குடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3.5 லட்சம் பணத்தை இழந்த பாலன் என்ற பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.(1/4)

— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss)

 

ஒப்புதல் அளிக்க வேண்டும்

ஆன்லைன் சூதாட்டத் தடை மட்டுமே இளைஞர்களை மீட்கும்; காக்கும்! 41 உயிர்கள் பலியான பிறகும், 88 நாட்களாக காத்துக்கிடக்கும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காதது கண்டிக்கத்தக்கது. இனியும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு  ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

டெல்லி செல்லும் ஆளுநர்.! பிரதமரிடம் ஸ்டாலின், அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கொடுக்கிறாரா? வெளியான பரபரப்பு தகவல்

click me!