டெல்லி செல்லும் ஆளுநர்.! பிரதமரிடம் ஸ்டாலின், அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கொடுக்கிறாரா? வெளியான பரபரப்பு தகவல்

By Ajmal KhanFirst Published Jan 13, 2023, 9:50 AM IST
Highlights

திமுக அரசு மற்றும் ஆளுநர் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில்,  இன்று டெல்லி செல்லும் ஆர்.என்.ரவி பிரதமர் மோடியை சந்தித்து திமுக அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் தொடர்பான புகார்களை அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநருடன் தமிழக அரசு மோதல்

தமிழக அரசுக்கும்- தமிழக ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து கொண்டே வருகிறது. நீட் மசோதா தொடர்பாக ஏற்பட்ட மோதல் ஆன்லைன் சூதாட்டம் மசோதா வரை நீடித்தது வருகிறது. இதனையடுத்து தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும் என ஆளுநர் தெரிவித்தது தமிழக அரசியல் கட்சிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி , அமைதி பூங்கா, தமிழ்நாடு, பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கர் உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்தும் தனது சொந்த வாக்கியங்களை கூடுதலாக சேர்த்தும் படித்தார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தி அதிரடி காட்டினார்.

இப்படி ஒரு அழைப்பிதழா..? தமிழ் மாதமும் இல்லை... தமிழ்நாடும் இல்லை- ஆளுநருக்கு எதிராக கொதித்தெழும் ராமதாஸ்

குடியரசு தலைவரிடம் புகார்

இதன் காரணமாக சட்டமன்ற கூட்டத்தில் இருந்து ஆளுநர் ஆர் என் ரவி பாதியில் வெளியேறினார். ஆளுநரின் செயல்பாடுகளுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து இருந்தன, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் குழு,  சட்ட அமைச்சர் ரகுபதி தலைமையில்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனுவையும், தமிழ்நாடு முதல்வர் எழுதிய கடிதத்தை சீலிட்ட கவரில் வழங்கினர். சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், சட்ட சபையில் ஆளுனர் நடந்துகொண்ட விதம் மிக வருந்தத்தக்க விஷயல் என்பதையும், தேசிய கீதம் ஒலிப்பதற்கு முன்னால் ஆளுநர் சட்டப்பேரவையில் வெளி நடப்பு செய்தது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல் என்பதை எடுத்துரைத்ததாக கூறினார்.

ஆளுநருக்கு அறிவுரை கூற வேண்டும்... குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!

பிரதமரை சந்திக்கிறாரா ஆளுநர்

இந்தநிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். அப்போது தமிழக அரசுடன் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக உள்துறை அமைச்சரை சந்தித்து புகார் தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ள யூடுயூப்பர் சவுக்கு சங்கர்,

Sources : TN Governor Ravi to meet PM Modi tomorrow at Delhi. He will hand over a detailed dossier not only on Stalin, his family and cabinet but also about a dozen IAS & IPS officers.

— Savukku Shankar (@Veera284)

 

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் மீதான புகார் பட்டியலை கொடுக்க இருப்பதாகவும், மேலும்  ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்பான  விரிவான ஆவணத்தை ஒப்படைப்பார் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

அதிமுகவை உடைத்து அசிங்கமான தலைவராகிவிட்டார் இபிஎஸ்.! இப்போதும் கட்சி இணைப்புக்கு ஓபிஎஸ் தயார்-புகழேந்தி அதிரடி

click me!