அதிமுகவை உடைத்து அசிங்கமான தலைவராகிவிட்டார் இபிஎஸ்.! இப்போதும் கட்சி இணைப்புக்கு ஓபிஎஸ் தயார்-புகழேந்தி அதிரடி

By Ajmal KhanFirst Published Jan 13, 2023, 9:03 AM IST
Highlights

சட்டமன்றத்தில் ஆளுநர் திராவிட இயக்க தலைவர்களின் பெயர்களை கூறாமல் தவிர்த்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தான் வெளிநடப்பு செய்யும். ஆனால் ஆளுநர் வெளிநடப்பு செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. ஆளுநர் செயல்பட்ட விதத்தின் மூலம் அனைவரின் எதிர்ப்பையும் ஆளுநர்ம்பாதித்து விட்டார். என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒற்றை தலைமை மோதல்

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக யாருக்கு சொந்தம் என போட்டியானது இரு தரப்பிலும் நிலவி வருகிறது. இந்தநிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் அணியின் ஆதரவாளர் புகழேந்தி, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் முழுமையாக விசாரித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நிச்சயம் ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக தான் தீர்ப்பு வரும். ஓபிஎஸ் தான் அதிமுகவின் தலைமையை ஏற்பார். உயர் நீதிமன்றத்தில் ஈ.பி.எஸ் தரப்பு பொதுக்குழு தொடர்பாக தவறாக வழி நடத்தியுள்ளார்கள். அவர்கள் கூறிய பொய்கள் எல்லாம் இந்த முறை எடுபடாது.  சட்டமன்றத்தில் ஆளுநர் திராவிட இயக்க தலைவர்களின் பெயர்களை கூறாமல் தவிர்த்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்காக திமுக ஆளுநருடன் தினமும் மோதல் போக்கை கடைபிடிக்கக்கூடாது. 

இப்படி ஒரு அழைப்பிதழா..? தமிழ் மாதமும் இல்லை... தமிழ்நாடும் இல்லை- ஆளுநருக்கு எதிராக கொதித்தெழும் ராமதாஸ்

இபிஎஸ் வெளியேறியது ஏன்.?

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என சட்டமன்றத்தில் ஈ.பி.எஸ் பேசுகிறார். கோடநாடு கொலை வழக்கில் சிக்கியுள்ள ஈ.பி.எஸ், தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்ற ஈ.பி.எஸ் சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது. திமுக அரசு கோடநாடு வழக்கை ஒரு வருடம் வைத்து விசாரித்து கோட்டை விட்டுவிட்டு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைத்துள்ளார்கள். முதல்வர் தேர்தல் நேரத்தில் ஒன்றரை மணி நேரம் கோடநாடு வழக்கு பற்றி பேசினார். ஆனால் தற்போது வரை ஏன் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. சட்டமன்றத்தில் முதல்வர் கோடநாடு வழக்கு பற்றி பேச தொடங்கியதுமே ஈ.பி.எஸ் உடனே வெளிநடப்பு செய்கிறார். அப்பன் புதிருக்குள் இல்லை என்பதைப் போல உள்ளது ஈ.பி.எஸ் இன் நடவடிக்கை உள்ளதாக குறப்பிட்டார்.

திமுக ஆட்சியில் எந்த அளவிற்கு கொள்ளையர்களுக்கு துணிச்சல் வந்திருக்கிறது பார்த்தீங்களா? கொதிக்கும் டிடிவி.!

அதிமுகவில் மெகா கூட்டணி

அதிமுக பிரிந்து விட வேண்டாம் என திமுகவினர் கூட என்னிடம் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் 55 ஆண்டுகள் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்த நிலை போய் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வர காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அனுமதித்து விடக்கூடாது. அதிமுகவை அழிக்கும் வேலையை தான் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார்.  அதிமுகவில் மெகா கூட்டணி எங்கு உள்ளது.எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறார். அவரை நம்பி யாரும் கூட்டணிக்கு வரமாட்டார்கள் என கூறினார். 

மூன்று நான்கு பிரிவுகளாக இருக்கும் அதிமுக ஒன்றாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம். இப்படி நான்கு பிரிவுகளாக இருந்தால் திமுகவிற்கு தேர்தலே தேவையில்லை என்று  தெரிவித்த புகழேந்தி. அதிமுகவின் நலனுக்காக ஓ.பி.எஸ் இப்போதும் அதிமுக ஒருங்கிணைப்பிற்கு தயாராக உள்ளதாக குறப்பிட்டார். 

இதையும் படியுங்கள்

இப்படி ஒரு அழைப்பிதழா..? தமிழ் மாதமும் இல்லை... தமிழ்நாடும் இல்லை- ஆளுநருக்கு எதிராக கொதித்தெழும் ராமதாஸ்

click me!