இப்படி ஒரு அழைப்பிதழா..? தமிழ் மாதமும் இல்லை... தமிழ்நாடும் இல்லை- ஆளுநருக்கு எதிராக கொதித்தெழும் ராமதாஸ்

By Ajmal KhanFirst Published Jan 13, 2023, 8:00 AM IST
Highlights

ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ் மாதமும் இல்லை, திருவள்ளூவர் ஆண்டும் இல்லை என தெரிவித்துள்ள பாமக நிறுனவர் ராமதாஸ், இப்படி ஒரு அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லையென கூறியுள்ளார்.

ஆளுநரும் தமிழக அரசும்

தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் இடையே தொடர் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.  வெளியிடங்களில் நடைபெற்று வந்த மோதல் தற்போது தமிழக சட்டப்பேரவையில் நேரடியாக எதிரொலித்தது. தமிழக அரசு ஒப்புதல் அளித்த உரையில் உள்ள தமிழ்நாடு, அமைதி பூங்கா, பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கர் போன்ற வார்த்தைகளை தவித்து தானாக சில வார்த்தைகளை சேர்ந்து படித்தார். இதற்க்கு ஆளுநர் முன்பாகவே எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்து ஆளுநரை அதிர்ச்சி அடையவைத்தார். இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து பாதியிலேயே ஆளுநர் வெளியேறினார்.

ஆளுநரை விமர்சிப்பதை நிறுத்திக்கொண்டால் திமுக அரசை காப்பாற்றிக்கொள்ளலாம் - எச்.ராஜா எச்சரிக்கை

பொங்கல் அழைப்பிதழ் சர்ச்சை

இந்தநிலையில் ஆளுநர் மாளிகை சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டிருந்தது. அதில் தமிழ்நாடு ஆளுநர் என்பதை மாற்றி தமிழக ஆளுநர் என பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் தமிழ்நாடு அரசு முத்திரைக்கு பதிலாக மத்திய அரசு முத்திரை பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தமிழக அரசியல் கட்சிகளை அதிர்ச்சி அடையவைத்த நிலையில் கண்டனங்களை தெரிவித்து இருந்தன. அரசியல் கட்சிகள் கண்டனங்களுக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் அதிமுக சார்பாக ஓபிஎஸ்-இபிஎஸ் மட்டும் பொங்கல் விருந்தில் கலந்து கொண்டனர். இந்த பொங்கல் விழாவில் தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்து இருந்தன.

இப்படி ஒரு அழைப்பிதழா.?

இந்தநிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை...ஆளுனர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் திருவள்ளுவர் ஆண்டு இல்லை...

இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை...
ஆளுனர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில்
திருவள்ளுவர் ஆண்டு இல்லை...
தமிழ் மாதம் இல்லை...
தமிழ்நாடு இல்லை....
தமிழ்நாட்டரசின் இலச்சினை இல்லை.
இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை! pic.twitter.com/GnccvorRjE

— Dr S RAMADOSS (@drramadoss)

 

தமிழ் மாதம் இல்லை...தமிழ்நாடு இல்லை....தமிழ்நாட்டரசின் இலச்சினை இல்லை.இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை என தனது எதிர்ப்பை ராமதாஸ் பதிவு செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்

திமுக ஆட்சியில் எந்த அளவிற்கு கொள்ளையர்களுக்கு துணிச்சல் வந்திருக்கிறது பார்த்தீங்களா? கொதிக்கும் டிடிவி.!
 

click me!