திமுக ஆட்சியில் எந்த அளவிற்கு கொள்ளையர்களுக்கு துணிச்சல் வந்திருக்கிறது பார்த்தீங்களா? கொதிக்கும் டிடிவி.!

By vinoth kumarFirst Published Jan 13, 2023, 6:48 AM IST
Highlights

ரட்டைக் கொலையுடன் கொள்ளை சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. திருமணத்திற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த நகைகள், வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கண்ணங்கோட்டையில் இரட்டைக் கொலையுடன் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் குமார். இவரது மனைவி வேலுமதி (35). இவரது கணவர் வெளிநாட்டில் இருப்பதால் மகன் மூவரசனுடன் வேலுமதி அவரது தாயார் கனகம் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அதிகாலை கனகத்தின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வேலுமதியை அரிவாளால் சரமாரியாக வெட்டியதுடன் அதை தடுக்க முயன்ற அவரின் தாய் மற்றும் மகனையும் வெட்டிவிட்டு பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவத்தில் வேலுமதி, கனகம் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இரட்டைக் கொலையுடன் கொள்ளை சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று டிடிவி. தினகரன் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- வீடு புகுந்து பெண் வெட்டி படுகொலை.. நகைக்காக கொலையா? வேறு ஏதேனும் காரணமா?

இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கண்ணங்கோட்டையில் இரட்டைக் கொலையுடன் கொள்ளை சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. திருமணத்திற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த நகைகள், வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன.

இதற்காக பெண்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் கொள்ளையர்களுக்கு திமுக ஆட்சியில் எந்த அளவிற்கு துணிச்சல் வந்திருக்கிறது என்பதும் தமிழ்நாட்டின் இன்றைய சட்டம் - ஒழுங்கின் நிலைக்கு ஒர் எடுத்துக்காட்டு.

இதையும் படிங்க;-  முதலமைச்சர் ஸ்டாலின் செய்தது தவறு இல்லை.. உங்களுக்கு நல்ல பெயர் வரணும்னா இதைசெய்யுங்க.. டிடிவி. தினகரன்..!

இந்த கொலை, கொள்ளைக்கு காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்படவேண்டும். பாதிக்கப்பட்ட கண்ணங்கோட்டை செல்லையா குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று டிடிவி. தினகரன் கூறியுள்ளார். 

click me!