கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட துணைத் தலைவர் திரு ஆரூர் T.ரவி அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் கட்சியின் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக துணை தலைவர் ஆரூர் ரவியை கட்சியிலிருந்து நீக்கி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த 6ம் தேதி நடைபெற்ற பாஜக மாவட்ட பொறுப்பாளர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுந்தரத்தின் ஆதரவாளர் ரவி மற்றும் புததிய மாவட்ட தலைவர் அருள் ஆகிய இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதனையடுத்து, ஒருவருக்கொருவர் நாற்காலிகளை வீசி தாக்கிக்கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், கட்சியில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக துணை தலைவர் ஆரூர் ரவி நீக்கப்பட்டுள்ளார்.
undefined
இதையும் படிங்க;- ஆளுநரை விமர்சிப்பதை நிறுத்திக்கொண்டால் திமுக அரசை காப்பாற்றிக்கொள்ளலாம் - எச்.ராஜா எச்சரிக்கை
இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட துணைத் தலைவர் திரு ஆரூர் T.ரவி அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் கட்சியின் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்.
ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க;- ஆளுநர் சரியாக தான் நடந்து கொண்டார்.. எல்லாமே பொய்.! உண்மையை உடைக்கும் அண்ணாமலை