Ponmudi Case : தேசிய கொடி இல்லாத காரில் பொன்முடி.! உச்சகட்ட பாதுகாப்பில் உயர்நீதிமன்றம்

By Ajmal Khan  |  First Published Dec 21, 2023, 10:14 AM IST

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மீது இன்று தண்டனை அறிவிக்கப்படவுள்ள நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராக தனது மனைவியோடு தேசிய கொடி இல்லாத காரில் வந்தார்.


நீதிமன்றத்திற்கு வந்த பொன்முடி

வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்த  சென்னை உயர் நீதிமன்றம், தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக (டிசம்பர் 21ம் தேதி) ஆஜராகும்படி பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து. இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Latest Videos

undefined

 

நீதிமன்றத்திற்கு தேசிய கொடி இல்லாத காரில் பொன்முடி வந்தார். பொன்முடி நீதிமன்றம் வந்ததையடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தீர்ப்புக்காக காத்திருக்கும் திமுகவினர்

உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருக்கும் பொன்முடிக்கு இன்று 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கும் பட்சத்தில் எம்எல்ஏ பதவியை இழக்கும் நிலை உருவாகும். இதனால் அமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிடும். எனவே இன்றையை தீர்ப்பை திமுகவினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆர்வமோடு எதிர்நோக்கியுள்ளனர். 

இதையும் படியுங்கள்

ஜெயலலிதா முதல் பொன்முடி வரை... தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ, எம்பிக்கள் யார்.? யார்.? பட்டியல் இதோ

click me!