மரியாதைக்குரிய துணை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் அவர்களை தூற்றியும், அவமரியாதையும் செய்த எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
பாராளுமன்றம் மீது தாக்குதல்
பாராளுமன்றத்தில் கலர் புகை குண்டுகளோடு இரண்டு பேர் உள்ளே புகுந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரிய விளக்கம் கேட்டு அமளியில் ஈடுபட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து துணை குடியரசு தலைவரை போல் செய்து காண்டி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நாடு முழுவதும் எதிர்கட்சிகள் சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக பாஜக சார்பாக போட்டி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்,
போட்டி பாராளுமன்றம்
எதிர்கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், கடந்த சில நாட்களாக. பாராளுமன்ற மரபுகளை மீறியும், பொது மக்களுக்கு தாங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய கடமையை மறந்தும், அரசியல் சாசன பதவியில் உள்ளவர்களிடம் அவமரியாதையாக நடந்து வந்ததையும் நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். இந்த தவறான நடத்தையை இன்னும் அவர்கள் தொடர்ந்து கொண்டிருப்பது பாராளுமன்றத்திற்கு மட்டுமன்றி மக்கள் மன்றத்திற்கும் அவமானமாகும்.
ஆர்ப்பாட்டம் அறிவித்த அண்ணாமலை
மரியாதைக்குரிய துணை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் அவர்களை தூற்றியும், அவமரியாதையும் செய்த ராகுல் காந்தி மற்றும் அவருக்கு துணை நின்ற இதர எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து நாளை 21.12.2023, வியாழக்கிழமை அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும். அரசியல் சாசன அமைப்புகள் இயங்க முடியாமல் முடக்கியவர்களுக்கு எதிராக நமது கண்டன குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதனை தெரிவித்து கொள்வதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்
Tuticorin Flood : வெள்ளத்தில் தத்தளிக்கும் தூத்துக்குடி.! 3வது நாளாக 7 ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பணி