
தூத்துக்குடி அரசு மருத்துவமனைப் பிணவறை முன்பு அணிவகுத்துள்ள ஆம்புலன்சுகள் குறித்து இந்த விடியா திமுக அரசு உரிய விளக்கம் தர வேண்டும் என அதிமுக ஐடி பிரிவின் செயலாளர் ராஜ் சத்யன் கூறியுள்ளார்.
தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகினர். மழை வெள்ளம் சில உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைப் பிணவறை முன்பு அணிவகுத்துள்ள ஆம்புலன்சுகள் குறித்து இந்த விடியா திமுக அரசு உரிய விளக்கம் தர வேண்டும் என ராஜ் சத்யன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக மதுரை மண்டல ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் பிணவறை பிரிசரின் கொள்ளளவு 12 என கூறப்படும் நிலையில் அதன் முன்பு 20 ஆம்புலன்சுகள் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
வெள்ள பாதிப்புகளால் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்து அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அரசு மருத்துவமனை பிணவறையில் 50ற்கும் மேற்பட்ட சடலங்கள் இருக்கக்கூடும் என உள்ளூர் செய்தி சேகரிப்பாளர்களால் அஞ்சுகிறார்கள்.
அவர்களின் சந்தேகங்களையும், அச்சத்தினையும் களைவதற்கு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைப் பிணவறை முன்பு அணிவகுத்துள்ள ஆம்புலன்சுகள் குறித்து இந்த விடியா திமுக அரசு உரிய விளக்கம் தர வேண்டும்.
இறந்த குழந்தையை அட்டைப்பெட்டியில் வைத்த கண்ணியமற்ற செயலையும் கூச்சமின்றி செய்த இந்த விடியா அரசு, முறையான தகவல்களை மக்களிடம் தெரிவித்து, உயிரிழப்புகள் இருப்பின் அவர்தம் அடக்கத்தினையாவது உரிய மரியாதையுடன் மேற்கொள்ள வேண்டும் என ராஜ் சத்யன் தெரிவித்துள்ளார்.