மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கும் மது பானங்கள் விலை ஏற்றத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
விரைவில் அத்திகடவு-அவிநாசி திட்டம்
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் வளர்ச்சி பணிகள் குறித்து மதுவிலக்கு, ஆயத்தீர்வை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துச்சாமி மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள சிகிச்சை வசதிகள் மற்றும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துச்சாமி, அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரைவில் முடிக்கப்படும் எனவும் ஒரு வாரத்திற்குள் தொடக்க விழா தேதி முதல்வரிடம் பேசி பின்னர் அறிவிக்கப்படும் என கூறினார்.
அண்ணாமலை அவர் வேலையை பார்க்கிறார்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்தித்து திமுகவினரின் சொத்து பட்டியல் வழங்குவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அண்ணாமலை அவரது வேலையை செய்கிறார். நாங்கள் எங்களது வேலையை செய்கிறோம். அவர் செய்யும் வேலை எல்லாம் நாங்கள் பார்த்து கொண்டு இருந்தால் எங்களது வேலை கெட்டு விடும் என்றார். மகளிர் உரிமை தொகை வழங்குவதற்காகத்தான் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கும் மதுபானங்கள் விலை ஏற்றத்திற்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லையென கூறியவர், எல்லா மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட வில்லையென முத்துசாமி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
திமுக அமைச்சர்களுக்கு செக்..! சொத்து பட்டியலோடு ஆளுநர் ரவியை சந்திக்கும் அண்ணாமலை