மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையாக இருக்கலாம்.! தங்க சம்பா சாப்பிட்டால் தங்கமாக இருக்கலாம்-எம் ஆர் கே

By Ajmal Khan  |  First Published Mar 21, 2023, 12:13 PM IST

நெல்லுக்கு வழங்கி வந்ததை போல்  வரும் ஆண்டு முதல் கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, துவரை, உளுந்து, பச்சைப் பயறு. நிலக்கடலை, எள், கரும்பு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


வேளாண் அறிக்கை தாக்கல்

தமிழக நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதி நிலை அறிக்கையில் குடும்பத்தலைவிகளுக்கு மாதாந்திர உதவி தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதனையடுத்து  தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை பச்சை துண்டு அணிந்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை  தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் முக்கிய முக்கியமாக அகில இந்திய அளவிலான பாரம்பரிய நெல் விதைகளை, இனத் தூய்மையுடன் விதை வங்கியில் பராமரித்து வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, 10 விவசாயிகளுக்கு வரும் ஆண்டில் தலா மூன்று இலட்சம் ரூபாய் வீதம் 30 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

Latest Videos

undefined

TN Agriculture Budget 2023 : ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு பரிசு

வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளுக்குப் பரிசு வழங்கப்படும் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம், நெற்பயிரில் மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு மட்டும், ஐந்து இலட்சம் ரூபாய் பரிசினை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. நெல்லுக்கு வழங்கி வந்ததை, சிறுதானியங்கள். பயறு வகைகள். எண்ணெய் வித்துகள் போன்றவற்றிற்கும் வழங்கவேண்டும் என்கிற அடிப்படையில், வரும் ஆண்டு முதல் கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, துவரை, உளுந்து, பச்சைப் பயறு. நிலக்கடலை, எள், கரும்பு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையாக...

தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் இரகங்களான தூய மல்லி. சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கிச்சிலி சம்பா. தங்க சம்பா, கீரை சம்பா ஆகியவற்றைப் பாதுகாத்து பரவலாக்கிட, நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில், 2021-22 ஆம் ஆண்டு, 196 மெட்ரிக் டன் விதைகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

 

அப்போது அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம், மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையாக இருக்கலாம்.! தங்க சம்பா சாப்பிட்டால் தங்கமாக இருக்கலாம் என தெரிவித்தார். அப்போது, குறுப்பிட்டு பேசிய சபாநாயகர் அப்பாவு “ எல்லாருக்கும் கொடுங்க. சாப்பிடுவதற்கு தயாராக இருக்காங்க” என்றார். சபாநாயகரின் இந்த பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது. அதற்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ‘எல்லாருக்கும் கொடுத்துடுவோம்’ என பதில் அளித்தார்.

இதையும் படியுங்கள்

பச்சை துண்டு அணிந்து வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்.! முக்கிய அறிவிப்புகள் வெளியீடு

click me!