டிடிவி தினகரன் கூடாரத்தையே திட்டம் போட்டு காலி செய்யும் எடப்பாடி..! அதிர்ச்சியில் அமமுக நிர்வாகிகள்

By Ajmal Khan  |  First Published Mar 21, 2023, 9:55 AM IST

அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஒன்றன் பின் ஒன்றாக எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருவது டிடிவி தினகரனை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.


அதிமுக உட்கட்சி மோதல்

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியால் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முதலில் டிடிவி தினகரன் வெளியேற்றப்பட்ட நிலையில், அடுத்ததாக சசிகலா மற்றும் ஓபிஎஸ்யையும் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிரடியாக நீக்கியுள்ளனர். இதனையடுத்து ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் சட் போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால் உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்வு செய்யும் பணியை தொடங்கியது.

Tap to resize

Latest Videos

அதிமுகவில் அமமுக நிர்வாகிகள்

அதில் எடப்பாடி பழனிசாமியை தவிர யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத காரணத்தால் எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். ஆனால் நீதிமன்றம் தேர்தல் முடிவு வெளியிட தடை விதித்துள்ளது. இந்தநிலையில் ஓபிஎஸ்  மற்றும் டிடிவி தினகரன் ஒன்றிணைந்து செயல்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனையடுத்து டிடிவி தினகரன் அணியில் இருந்து ஒவ்வொரு நிர்வாகியாக அதிமுகவில் இணைக்கும் பணியை எடப்பாடி பழனிசாமி தரப்பு மேற்கொண்டுள்ளது.  அமமுக தலைமை நிலைய செயலாளரும், திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.கே உமாதேவன் மற்றும் அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளராக இருந்த கோமல் ஆர்.கே அன்பரசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கடந்த வாரம் அதிமுகவில் இணைந்தனர்.  

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள்

இதனை தொடர்ந்து அம்மா முன்னேற்ற கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.கே.சிவசாமி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.தற்போது அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர்கள், வர்த்தக அணி, இளைஞர் அணி, பொறியாளர் அணி, வழக்கறிஞர் பிரிவு,

வரவேற்ற ஈபிஎஸ்

வெளிநாடு வாழ் தமிழர் நலப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 12 பேர் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்வின்போது. கழக அமைப்புச் செயலாளரும், நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  O.S. மணியன், M.L.A., மயிலாடுதுறை மாவட்டக் கழகச் செயலாளர்  S. பவுன்ராஜ், சமீபத்தில் அமமுக-வில் இருந்து விலகி கழகத்தில் இணைந்த கோமல் அன்பரசன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இதையும் படியுங்கள்

காலியாகும் டிடிவி தினகரன் அணி..! இளைஞர் அணி செயலாளரை தொடர்ந்து அமைப்புச் செயலாளரை தட்டி தூக்கிய எடப்பாடி

click me!