தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை தினமும் நிலவரங்களை வெளியிட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலை, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை தினமும் நிலவரங்களை வெளியிட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி நேற்று தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 402 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் 37 பேர் இன்று கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாகவும், உயிரிழப்பு எதுவும் இல்லை என சுகாதாரத்துறை தரப்பில் தகவல் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க;- ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை!!
இந்நிலையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, இன்ஃபுளூயன்சா காய்ச்சல் பரவல் குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க;- வசூல் வேட்டை நடந்திய டாஸ்மாக்! அடுத்த டார்கெட் 50 ஆயிரம் கோடி!