வேளாண் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட பல தொலைநோக்கு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தியதால் 1,930 ஹெக்டேர் வியசாய பரப்பு அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 63.48 லட்சம் ஹெக்டேராக சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக வேளாண் பட்ஜெட்
தமிழக நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதி நிலை அறிக்கையில் குடும்பத்தலைவிகளுக்கு மாதாந்திர உதவி தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதனையடுத்து தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை 3வது முறையாக வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். விவசாயிகளை பெருமைப்படுத்தும் வகையில், பச்சை துண்டு அணிந்து தனது வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு புதிய அறிவிப்புகளும் திட்டங்களும் வெளியிடப்பட்டது. அதன்படி2021-22ல் வேளாண் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட பல தொலைநோக்கு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தியதால் 1,930 ஹெக்டேர் விசாய பரப்பு அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 63.48 லட்சம் ஹெக்டேராக சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதாக கூறினார். வறட்சி, வெள்ளப் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் பயிர் ரகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தமிழக பட்ஜெட் நம்பிக்கைத் துரோகத்தின் ஒட்டுமொத்த உருவம்..! திமுக அரசை விளாசும் ஓபிஎஸ்
அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தவர், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மகசூலை அதிகரிப்பதே இலக்கு என கூறினார். சிறுதானிய பரப்பு உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் 20 மாவட்டங்களை உள்ளடக்கி அறிவிக்கப்பட்ட இரண்டு சிறு தானிய மண்டலங்களில், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படும். சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள குடும்பத்தினர்களுக்கு கேழ்வரகு வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மக்களிடையே சிறுதானிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சிறுதானிய திருவிழாக்கள் ஏற்படுத்தப்படும். வரும் ஆண்டின் ஒன்றிய மாநில அரசுகள் உதவியுடன் 22 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இளைஞர்கள் தான் துணிந்து பல பரிசோதனைகளை நிகழ்த்துவார்கள். இதனை மனதில் வைத்து 2021- 22 ஆம் ஆண்டில் 185 வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ஒரு லட்சம் மானியம் வழங்கப்பட்டு அவர்கள் மூலமாக "அக்ரி கிளினிக்" ஏற்படுத்தப்பட்டு வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். . கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட செயல்படுத்தப்பட்டு வரும் 2,504 கிராம ஊராட்சிகளில் வேளாண் முன்னேற்ற குழுக்கள் 2 கோடியை 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு செயல்படுவதற்கு பயிற்சிகள் அளிக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்