“120 கோடியில் திருமணம்..ஜெயலலிதா போல ஜெயிலுக்கு போவார் அமைச்சர் மூர்த்தி - திகில் கிளப்பும் சவுக்கு சங்கர் !”

By Raghupati RFirst Published Sep 14, 2022, 7:30 PM IST
Highlights

அமைச்சர் பி.மூர்த்தியின் மகன் தியானேஷுக்கும், திருச்சியைச் சேர்ந்த ஸ்மிர்தவர்ஷினிக்கும் கடந்த வாரம் மதுரையில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்தது.

பிரமாண்ட கோட்டை நுழைவு வாயில், ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் பந்தல், ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேர் அமரும் வகையில் சாப்பாட்டுப் பந்தல், விஐபி டைனிங் என பாகுபலியை மிஞ்சும் பிரமாண்டத்தை காட்டினார்கள்.மொய் வசூலிக்க தனியார் நிறுவனம் மூலம் 50 ஹைடெக் கவுன்ட்டர் அமைக்கப்பட்டிருந்தது. 

கறி விருந்துக்காக கிட்டத்தட்ட சுமார் 2,000 ஆடுகள், 5,000 கோழிகள் மூலம் பிரியாணி உள்ளிட்ட அசைவ வகைகள் பரிமாறப்பட்டன.  சைவ விருந்துக்கு தனிப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அனைவருக்கும் பல பொருள்கள் அடங்கிய தாம்பூலப்பை வழங்கப்பட்டது. ஆனால் இந்த திருமண விழா பொதுமக்கள் மத்தியில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதேபோல ஒரு சர்ச்சையில் தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் சிக்கினார். 

மேலும் செய்திகளுக்கு..ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்.. பள்ளி நிர்வாகத்துடன் பேரம் பேசும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு ! - பரபரப்பு

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா உடன் பிறந்த அக்கா வனிதாமணியின் கடைசி மகன்தான் சுதாகரன். தினகரன், பாஸ்கரனுக்கு அடுத்ததாகப் பிறந்தவர் இவர். அப்போதே இவ்வளவு பெரிய ஆணை தத்தெடுப்பதா என தமிழகமே மூக்கு மீது விரலை வைத்தது. ஆனால் அடுத்த சில வாரங்களிலேயே நடிகர் சிவாஜி கணேசன் பேத்தியோடு சுதாகரனுக்கு திருணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது முதலே தொடங்கியது சர்ச்சை.

சினிமா கலை இயக்குநர் தோட்டா தரணி இந்த திருமணத்தில் 70,000 சதுர அடிப் பரப்பில் பந்தல் அமைத்தார் என்றார் பார்த்துக்கொள்ளுங்கள். 25 ஆயிரம் பேர் அமரும் அளவுக்கான உணவருந்தும் அரங்கு என பாகுபலியை மிஞ்சிய பிரமாண்டத்தை அப்பொழுதே காட்டினார் ஜெயலலிதா. இந்தத் திருமணத்தில் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்துகொண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் நடந்துவந்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. 

அது பெரும் சர்ச்சையாகியது. காரணம் பலருக்கும் தெரியாது என்றுதான் கூற வேண்டும். மாதம் 1 ரூபாய் மட்டுமே ஊதியம் வாங்குகிறேன் என்று கூறிய ஜெயலலிதாவா இப்படி பிரமாண்டமாக நடத்துகிறார் ? என்று கேள்வி எழுந்தது. பொதுமக்கள் மத்தியில் இது பேசுபொருளாகி சர்ச்சையானது.அதிமுக ஆட்சி மாற்றத்திற்கு இதுதான் பெரிய காரணம் என்றும் சொல்லப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு..air india : ஏர் இந்தியா விமானத்தில் கிளம்பிய புகை.. 141 பயணிகளின் கதி என்ன ? பதறவைக்கும் வைரல் வீடியோ !

இந்நிலையில் அமைச்சர் மூர்த்தியை பற்றி பல்வேறு தகவல்களை சவுக்கு சங்கர் தனியார் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ‘தற்போது பத்திரப்பதிவுத்துறையின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஊழல் தற்போது நடைபெற்று வருகிறது. பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் மகன் திருமணம் செலவு மட்டும் ரூ. 90 கோடி முதல் ரூ. 120 கோடி செலவில் நடைபெற்றுள்ளது. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்திற்கு பின்னர், இந்தியாவே திரும்பி பார்த்த பிரம்மாண்ட திருமணம் அமைச்சர் மூர்த்தியின் திருமணம் தான். 

ஜெயலலிதா சிறைக்கு சென்றதைப்போல அமைச்சர் மூர்த்தியும் சிறைக்கு செல்வார். இதனை எனது கண்களால் பார்க்க வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை. திருமணத்திற்கு கூட்டம் போதாது என்று சொல்லி,  தொகுதியை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் ரூபாய் 300 கொடுத்து வந்து சாப்பிட்டுவிட்டு செல்ல சொல்லியுள்ளனர். மூர்த்தி என்ன அதானி, அமேசான் ஓனர் வீட்டில் சம்பந்தம் செய்துள்ளாரா ? முதல்வர் அமைச்சர் மூர்த்தியை புகழ்கிறார். அப்படி என்றால் அவருக்கும் பங்கு செல்கிறது என்றே அர்த்தம் தெரியுமா ?' என்று கடுமையாக குற்றஞ்சாட்டினர்.

மேலும் செய்திகளுக்கு..“15 நாள் டைம்.. அதுக்குள்ள எல்லாம் செஞ்சு முடிக்கணும், இல்ல.? அமைச்சர் சேகர்பாபுவுக்கு எச்.ராஜா வார்னிங் !”

click me!