டெண்டர் முறைகேடு வழக்கில் ஈபிஎஸ் மீதான நடவடிக்கைக்கு தடையில்லை... உயர்நீதிமன்றம் அதிரடி!!

By Narendran S  |  First Published Sep 14, 2022, 6:43 PM IST

டெண்டர் முறைகேடு வழக்கில் ஈபிஎஸ் மீதான நடவடிக்கைக்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


டெண்டர் முறைகேடு வழக்கில் ஈபிஎஸ் மீதான நடவடிக்கைக்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியின் போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி,   நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கியதில் ரூ.4,8,200 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. மேலும் டெண்டரை அவர் தனது உறவினர்களுக்கு துக்கியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால்  வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த 2018 ஆம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனை இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது.

இதையும் படிங்க: முருகன் தமிழ்க்கடவுள், விநாயகர் யார்.? இந்து மதம் பற்றி ஆ.ராசா பேசியது தப்போ இல்ல.. பாஜகவை தெறிக்கவிட்ட சீமான்

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அண்மையில் திமுக மற்றும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. தாங்களும் சிபிஐ விசாரணை கோரவில்லை என்றும், காவல்துறையே விசாரணை நடத்தலாம் என்றும் வாதிட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணையை ரத்து செய்து, லஞ்ச ஒழிப்புத்துறையை விசாரணை நடத்தலாம் என்று உத்தரவிட்டிருந்தது. அத்துடன் சென்னை உயர்நீதிமன்றமே மீண்டும் இந்த வழக்கை விசாரிக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது. அதன்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆர்.எஸ்.பாரதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கடந்த அதிமுக ஆட்சியில் சாலை டெண்டர் வழங்கியதில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதனை ஓட்டியே இந்த வழக்கு தொடர்ந்ததாகவும் தெரிவித்தார். அத்துடன் தற்போதுள்ள திமுக அரசு  நடவடிக்கை எடுக்கும் என்பதால் அந்த வழக்கை தாங்கள் திரும்ப பெற இருப்பதாக வாதிட்டார். அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாங்கள் பதில் மனு தாக்கல் செய்யும் வரை எந்தவித உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: “15 நாள் டைம்.. அதுக்குள்ள எல்லாம் செஞ்சு முடிக்கணும், இல்ல.? அமைச்சர் சேகர்பாபுவுக்கு எச்.ராஜா வார்னிங் !”

அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகமது ஜின்னா, இந்த வழக்கை பொறுத்த அளவில்  தற்போது ஆரம்பகட்ட விசாரணை நடத்தி அறிக்கை என்பது விஜிலென்ஸ் ஆணையரிடம்  உள்ளதாகவும், அவர் மேற்கொண்ட நடவடிக்கை எடுப்பார் என்றும், அந்த நடவடிக்கை குறித்து தாங்கள் உயர்நீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்றும் சுட்டிக் காட்டினார். அதற்கு எடப்பாடி தரப்பில் பதில் மனு தாக்குதல் செய்யும் வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது என  தடை விதிக்க வேண்டும் என்றும்,  தற்போதுள்ள நிலையை நீடிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.  ஆனால் அதற்கு அரசு ஜின்னா   கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.  இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் விஜிலென்ஸ் ஆணையர் முடிவெடுக்க  எந்த தடையும் விதிக்காமல் வழக்கு விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

click me!