அமைச்சர் மெய்யநாதன் ஸ்போர்ட்ஸ்நாதனாகவே ஆகவே மாறிவிட்டார்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.!

By vinoth kumarFirst Published Sep 12, 2022, 12:10 PM IST
Highlights

ஒரு தடகள வீரர் ஓடும் அளவில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயல்பட்டு வருகிறது. உலகமே வியந்து பார்க்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்திக்காட்டப்பட்டது. அடுத்தப்படியாக டென்னிஸ் போட்டி நடத்த தயாராகிவிட்டீர்கள். 

அமைச்சர் மெய்யநாதன் ஸ்போர்ட்ஸ் நாதன் ஆகவே மாறிவிட்டார். சுறு சுறுப்பான அமைச்சர் கிடைத்ததற்கு பெருமை பட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னையில் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்;- ஒரு தடகள வீரர் ஓடும் அளவில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயல்பட்டு வருகிறது. உலகமே வியந்து பார்க்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்திக்காட்டப்பட்டது. அடுத்தப்படியாக டென்னிஸ் போட்டி நடத்த தயாராகிவிட்டீர்கள். அமைச்சர் மெய்யநாதன் ஒரு 'ஸ்போர்ட்ஸ்நாதனாகவே' மாறிவிட்டார். எப்போதும் தனது துறையை துடிப்போடு வைத்திருக்க வேண்டும் என்ற முனைப்பில் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க;- குஜராத், கர்நாடகாவை கம்பேர் பண்ணும் போது தமிழகத்தில் மின் கட்டணம் கம்மிதான்... அமைச்சர் செந்தில் பாலாஜி.!

திராவிட மாடல் கொள்கையின்படி அனைத்து துறைகளும் வளர வேண்டும் என்பதுதான் எங்களுடைய இலக்கு. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தில் நடைபெற்றது. இதன்மூலம் தமிழகத்தை உலகமே பார்த்து வியந்தது. இந்த போட்டியை தொடக்கத்தில் எந்த எண்ணத்தோடு தொடங்கினோமோ கடைசிவரை அதே எண்ணத்துடன் செயல்பட்டதால்தான், செஸ் ஒலிம்பியாட் அனைவராலும் போற்றப்பட்டது. 

கபடி, சிலம்பம் போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விளையாட்டுத்துறையில் புது மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. பழங்குடியினர்களின் விளையாட்டுகளை கண்டறிந்து ஊக்கப்படுத்தப்படும். உலகளவில் விளையாட்டில் தமிழக வீரர்கள் பங்கேற்று சாதனை புரிய வேண்டும் என்பதால் இதுபோன்ற விழா நடக்கிறது. அக்டோபரில் மாவட்ட அளவிலும், ஜனவரியில் மாநில அளவிலும் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் நடைபெறும். செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், தமிழகத்தில் உள்ள கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இளைஞர்கள், மாணவர்களிடையே விளையாட்டுப் போட்டிகள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  இந்தியாவிலேயே நம்பர் 1 அமைச்சர்.. நோட்டா கூட போட்டி போடும் பாஜக.. முற்றும் பாஜக Vs திமுக மோதல்!

click me!