அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமத்தை போட்ட முதலமைச்சர்..! ஸ்டாலின் ராஜ்யத்தில் பூஜ்யமே பரிசு- ஆர்.பி உதயகுமார்

Published : Sep 12, 2022, 11:36 AM IST
அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமத்தை போட்ட முதலமைச்சர்..! ஸ்டாலின் ராஜ்யத்தில் பூஜ்யமே பரிசு- ஆர்.பி உதயகுமார்

சுருக்கம்

ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் வெறும் வசனங்களை பேசிவிட்டு வந்ததால் அரசு ஊழியர்கள். வருத்தத்தில் உள்ளனர். எனது ராஜ்யத்த்தில் உங்களுக்கு பூஜ்யம் மட்டுமே பரிசு என ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர்  சொல்லிவிட்டு சென்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.  

ஜாக்டே-ஜியோ மாநாடு

தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏமாற்றியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகவ அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாக்டோ ஜியோ மாநாடு  படுதோல்வி அடைந்துள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். ஜாக்டோ ஜியோ மாநாடு தோல்வி தான் தற்பொழுது விவாத பொருளாக உள்ளது. அரசு பணியாளர் நடத்தை விதிப்படி  ஊதியம் பெரும் அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது மிகப்பெரிய குற்றச்சாட்டாக பார்க்கப்படுகிறது.  முதல்வரை மேடையில் வைத்துக்கொண்டு ஆளும் கட்சியை புகழ்ந்து அதனால் எதையும் சாதிக்க முடியாத சூழலில் மன குமுறலில் உள்ளனர்.

ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வரின் பேச்சில் எதிர்பார்த்த அறிவிப்புகள் வெளியாகாததால் முதல்வர் பேசும்போதே கூட்டம் கூட்டமாக அரசு ஊழியர்கள் வெளியேறினர். முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முதல்வர் பேசும்போதே கூட்டத்தை விட்டு அரசு ஊழியர்கள் வெளியேறினர். ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நம்பிக்கையை தொலைத்த மாநாடாக அமைந்துள்ளது.  அரசு நிர்வாக அங்கமாக உள்ள அரசு ஊழியர்கள் வேதனையில் உள்ளனர்.  ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு பட்டை நாமத்தை போட்டுள்ளது.

திமுக ஆட்சி பிடித்ததற்கு முக்கிய காரணம் இவர்கள் தான்.. முதல்வர் ஸ்டாலின் சொன்ன சீக்ரெட்.!

காற்றில் பறந்த வாக்குறுதி

தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக கூறிய முதல்வர் மாநாட்டில்  வாய் திறந்து பேசுவதற்கு தயாராக இல்லை என்பதை வெட்டம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவதாக கூறிவிட்டு தற்பொழுது ஏமாற்றத்தை மட்டும் தந்துள்ளனர். மரபுப்படி ஜாக்டோ ஜியோ மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளதா? என்ற விவாதம் எழுந்துள்ளது. எங்கள் வாழ்வில் விளக்கேற்றி வைக்க முதல்வர் தவறிவிட்டார் என அரசு ஊழியர்கள் முன்வைக்கும் கண்டன குரல் முதல்வரின் கவனத்திற்கு சென்றிருக்கும். 52 சதவீத மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு நீட் தேர்வு ரத்து என்ற உறுதிமொழி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்திற்கு நிகரான காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பள்ளி,  கல்லூரிகளில் போதை பொருட்கள் நடமாட்டம் எதிர்கால தலைமுறையை அச்சமடைய செய்துள்ளது.  விழா நடத்துவதில் வெற்றி கண்டுள்ள தமிழக அரசு பயனாளிகளுக்கு பயன்களை கொண்டு சேர்ப்பதில் தோல்வி கண்டுள்ளது .

அடுத்தடுத்து காவு வாங்கும் கோவை மேம்பாலம்...! உயிர் பலி வாங்க காரணம் என்ன..?அதிர்ச்சியூட்டம் தகவல்

அரசு ஊழியர்களுக்கு பூஜ்யமே பரிசு

இந்திய அளவில் விழா எடுப்பதில் முதன்மை முதல்ராக திகழ்கிறார். இந்தியாவில் சொத்து வரி,மின் கட்டண உயர்வு உயர்த்துவதில் முதன்மையான முதல்வராக திகழ்கிறார் முதல்வர். சட்டம் ஒழுங்கை வேடிக்கை பார்க்கும் முதல்வராக திகழ்கிறார். ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் வெறும் வசனங்களை பேசிவிட்டு வந்ததால் வருத்தத்தில் உள்ளனர் அரசு ஊழியர்கள். எனது ராஜ்யத்த்தில் உங்களுக்கு பூஜ்யம் மட்டுமே பரிசு என ஜாக்டோ ஜியோ மாநாட்டில் சொல்லிவிட்டு சென்றுள்ளார் முதல்வர். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கொண்டு வந்த திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம், இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட மகத்தான திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து எடுத்து சொல்லும் எதிர்க்கட்சி தலைவரின் கருத்தை இந்த அரசு செவி கொடுத்து கேட்க தயராக இல்லை என்றால் நாட்டு மக்களுக்கு எதுவும் செய்ய தயராக இல்லை என்பதை காட்டுவதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

வளர்ச்சித் திட்டங்களுக்கு தடையா.? தமிழிசை சந்தித்த அவலங்களைத்தான் ஆளுநர்களுக்கு ஏற்படும்- முரசொலி எச்சரிக்கை


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!