பாஜகவின் கொங்கு மண்டல கனவை தகர்த்தவர் செந்தில் பாலாஜி.. பாஜகவின் சுயநலம் - மா.சுப்பிரமணியன்

By Raghupati R  |  First Published Jun 14, 2023, 4:49 PM IST

திமுக ஊழல் கட்சி என்ற போலி கருத்தை நிரூபிக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. கொங்கு மண்டலத்தில் வெற்றிக் கனவில் இருந்த பாஜகவின் எண்ணங்களை தகர்த்தவர் செந்தில்பாலாஜி என்று கூறியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.


நள்ளிரவில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட அஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக் குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

அதில், மூன்று முக்கியமான ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதை அடுத்து, செந்தில் பாலாஜிக்கு உடனடியாக  இதய அறுவை (பைபாஸ் சர்ஜரி) சிகிச்சை செய்யவும் ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதனையடுத்து அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  இதற்கிடையே செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க இருந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சக்திவேல் திடீரென விலகினார்.

Tap to resize

Latest Videos

எனக்கு பாடம் எடுக்காதீங்க.. தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி லட்சியம்.! அதிமுகவை அலறவிடும் அண்ணாமலை

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த மனுவை விசாரிப்பதற்காக, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு அமைக்கப்பட்டது. விசாரணை அமர்வில் இருந்து நீதிபதி சக்திவேல் விலகிய நிலையில் புதிய அமர்வு அமைக்கப்பட்டது.  இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

அவர் பேசிய போது, “தேச நலனுக்காக உருவாக்கப்பட்ட அமலாக்கத்துறையை தனது அரசியல் லாபத்திற்காக பாஜக பயன்படுத்துவது மிக பெரிய ஜனநாயக படுகொலை ஆகும். பாஜகவின் கிளை அமைப்புகள் போல விசாரணை அமைப்புகள் செயல்படுகின்றன. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அரசியல் தில்லுமுல்லுகளை செந்தில் பாலாஜி விமர்சித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திமுக ஊழல் கட்சி என்ற போலி கருத்தை நிரூபிக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. கொங்கு மண்டலத்தில் வெற்றிக் கனவில் இருந்த பாஜகவின் எண்ணங்களை தகர்த்தவர் செந்தில்பாலாஜி. அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கையில் எந்த விதமான விதிமுறைகளும் பின்பற்றவில்லை. 

நாடாளுமன்ற தேர்தலுக்குள் திமுகவை களங்கப்படுத்த முயற்சி செய்துள்ளது பாஜக. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதால் பாஜக பதற்றம் அடைந்துள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷாவை திருப்திப்படுத்த அமலாக்கத்துறை மோசமான செயலில் ஈடுபட்டுள்ளது” என்று கூறினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி : முதல்வர் ஆசை நிறைவேறியது.. 2016ல் பேசிய வீடியோவை போட்டு வெறுப்பேற்றும் அண்ணாமலை

click me!