மாணவி பிரியா உயிரிழப்பு விவகாரம்..! கடவுளின் விதி என கூறி தப்பிக்க வில்லை..! அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த மா.சு

By Ajmal Khan  |  First Published Nov 16, 2022, 11:52 AM IST

மாணவி பிரியா உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது தொடர்பான மருத்துவ குழுவின் முழு அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


கொசு வலை வழங்கிய மா.சு

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் நீர் வழி தடங்கல் உள்ள பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கொசு வலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு கொசு வலைகளை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வடகிழக்கு பருவமழை ஒட்டி சென்னையில் நீர் வழி தடங்கல் அருகில் வசிக்கும் பொது மக்களுக்கு இரண்டு லட்சத்து 60 ஆயிரம் கொசுவலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பருவ மழை காலத்தில் கொசுக்களால் பரவும் நோய்த் தொற்றுகளை தடுக்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக 55 நாட்கள் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை என தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

ரூ.1000 போதாது..! மழையால் பாதித்த அனைவருக்கும் ரூ.5000 வழங்கிடுக..! திமுக அரசை வலியுறுத்திய மார்க்சிஸ்ட்

மாணவி பிரியா உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதியப்பட்ட பிறகே உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டது. மருத்துவர்களின் முதல் கட்ட அறிக்கையை வைத்து தான் கவனக்குறைவாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்தும் சட்ட ரீதியாகவும் தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவக் குழுவின் இறுதி அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தலைமறைவாக இருந்தால் அவர்களை காவல்துறை தேடி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும். 

அறநிலையத்துறை பள்ளி,கல்லூரியில் வெண்பொங்கல், இட்லியோடு காலை சிற்றுண்டி.! திட்டத்தை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின்

 திமுக ஆட்சியில் மருத்துவத்துறை சீரழிந்து விட்டதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அமைச்சர்,அண்மையில் குஜராத் மாநிலத்தில் தொங்கு பால விபத்தில் பலர் உயிரிழந்த பொழுது இது கடவுளின் விதி எனக் கூறி தப்பித்தது போன்று நாங்கள் செயல்படவில்லை. கவனக்குறைவு காரணமாக இது நடைபெற்றது என்ற தவறை உடனே தெரிவித்து அதற்கு தீர்வு என்ற அடிப்படையில் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறு யார் செய்திருந்தாலும் அதனை வெளிப்படுத்தி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என பேசினார்.

இதையும் படியுங்கள்

தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே இலக்கு – திருமாவளவன் சூளுரை

click me!