
சென்னை மாநகர மேயர் பிரியாவை யம்மா நிப்பியா அப்படியே... என அமைச்சர் கே.என் நேரு அதட்டலாக பேசியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இதை கண்டித்து வந்த நிலையில் "நான் பிரியாவை மிரட்டினேனா? மேயர் பிரியா என் பொண்ணு மாதிரி என நேரு விளக்கம் கொடுத்துள்ளார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயராக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பிரியா மேயராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டு முதல் தலித் பெண் மேயர் என்ற பெருமை மேயர் பிரியா பெற்றுள்ளார். அவரது தாத்தா மறைந்த செங்கை சிவம் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்றாலும்கூட மேயர் பிரியாவுக்கு அரசியல் மேடைகள் புதியதுதான், கல்லூரி படிப்பை முடித்து கவுன்சிலர் தேர்தலில் வெற்றிபெற்ற பிரியாவுக்கு மேடைப்பேச்சு என்பது புதிதுதான், இதனால் அவர் தகவல்களை பேப்பரில் எழுதி வைத்து படித்து வருகிறார், இது ஒன்றும் விமர்சிக்கும் அளவிற்கு பெரிய குறை ஒன்றும் இல்லை,
இதையும் படியுங்கள்: ராஜாத்தி அம்மாளுக்கு உடல் நலக்குறைவு.. சிகிச்சைக்காக ஜெர்மனி செல்கிறார் கனிமொழி !
இதுவரை அவரது பதவியில் அவர் பொறுப்புடனும், மக்கள் பணியில் தன்னடக்கத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார் என்பது பாராட்டுக்குரியதே, ஆனாலும்கூட திமுகவில் சில பழம் தின்னு கொட்டை போட்ட அரசியல்வாதிகள், அமைச்சர்கள் பிரியாவை போன்ற இனம் தலைமுறையினரை எதேச்சதிகாரமாக நடத்தும் போக்கு என்பது அக்கட்சியில் அரசு நிகழ்ச்சிகளில் பரவலாக காணமுடிகிறது, இந்நிலையில்தான் 383 வது சென்னை தினம் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் கொண்டாடப்பட்டது, இதையொட்டி செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது, அப்போது செய்தியாளர் கேள்வி எழுப்ப தயாராக இருந்தனர்.
இதையும் படியுங்கள்: கேப்டன் விஜயகாந்த் நாளை தேமுதிக அலுவலகம் வருகிறார்.. தொண்டர்கள் வரலாம்- பிரேமலதா தகவல்.
முன்னதாக மேயர் மற்றும் அமைச்சரை அவர்கள் போட்டோ எடுத்தனர், அப்போது மேயர் பிரியா பின்னால் சென்றார், அங்கிருந்த அமைச்சர் நேரு " யம்மா நிப்பியா இங்க" என அதட்டலாக கூறினார், அதைத்தொடர்ந்து கையில் வைத்திருந்த பேப்பரை படிக்கட்டுமா பிரியா நேருவிடம் கேட்க, அதற்கு அவர் ஏம்மா... சொல்லுமா என்று குரலை உயர்த்தி அதட்டலாக கூறினார், இது அங்கிருந்த செய்தியாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது, பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நேரு பதிலளித்தார். இந்நிலையில் பிரியாவை அமைச்சர் கே. என் நேரு ஒருமையில் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
செய்தியாளர்கள் முன்னிலையில் ஒரு பெண் மேயரை அவர் அதட்டலாக பேசியதும், கடிந்து கொண்டதும் கண்டனத்தை ஏற்படுத்தியது, நேருவுக்கு எதிராக பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வந்தனர், பட்டியலின பெண் என்பதால் மேயர் பிரியாவை திமுக அவமதிக்கிறது, இது சாதிய மற்றும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்று பலரும் கண்டித்தனர், அமைச்சர் நேரு சென்னை மெயில் பிரியாவை மிரட்டுகிறாரா என அரசியல் விமர்சகர் நாச்சியார் சுகந்தி கடுமையாக விமர்சித்தார், இதேபோல் தமிழ்நாட்டின் முக்கிய மேயரான பிரியாவை சேகர்பாபு குழந்தை என்கிறார்,
திமுகவில் தலித் பெண்ணை மேயராக்கிவிட்டோம் என்று சொன்னால் மட்டும் போதாது அவர்களுக்கு உரிய மரியாதையை அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும், என விமர்சித்தார். தனக்கு எதிராக எழுந்த விமர்சனத்திற்கு அமைச்சர் நேரு நாளிதழ் ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார், அதில், பிரியா எனக்கு மகள் போன்றவர், அந்த அர்த்தத்தில்தான் அவரிடம் நான் பேசினேன், செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன் என்று சொன்னார், அதனால் எனது இருக்கையை கொடுத்துவிட்டு நான் விலகிச் சென்று அமர்ந்தேன், இதில் எந்த ஆணாதிக்கமும் இல்லை, சாதிப் பாகுபாடும் இல்லை, என்ன விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது ஆண் அமைச்சர்களுக்கு மட்டுமே மரியாதை கொடுக்கப்படுகிறது, நான் சீனாராக இருந்தாலும்கூட என்னை விட இளைய அமைச்சர்கள் இருந்தாலும் முதலில் அவர்களை அழைத்தே மரியாதை செய்யப்படுகிறது, இந்த மனநிலை மாற வேண்டும் என அவர் கூறியிருந்தார். இந்நிலையில் மேயர் பிரியாவை அமைச்சர் கே.என் நேரு பேசியிருப்பது உண்மையிலேயே திமுகவில் பெண்களுக்கு மரியாதை இல்லையோ என்ற ஐயத்தை எழுப்பியுள்ளது.