கேப்டன் விஜயகாந்த் நாளை தேமுதிக அலுவலகம் வருகிறார்.. தொண்டர்கள் வரலாம்- பிரேமலதா தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Aug 24, 2022, 5:49 PM IST
Highlights

கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை நன்றாக உள்ளது எனவே அவரது உடல்நலம் குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை நன்றாக உள்ளது எனவே அவரது உடல்நலம் குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்  70வது வயதில் அடி எடுத்து வைக்க உள்ளார். உண்மையில் அவரது பிறந்தநாளை அக்கட்சியினர் வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று வழங்கினார்.

இதையும் படியுங்கள்: 36 மணி நேரத்தில் 15 படுகொலைகள், விடியா அரசே எங்கே போகிறது தமிழகம்.. தலையில் அடித்து அலறும் எடப்பாடி பழனிச்சாமி

ஒவ்வொரு ஆண்டும் வறுமை ஒழிப்பு தினமாக விஜயகாந்தின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது, ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது வழக்கம், அந்த வகையில் இன்று 70 ஆட்டோ ஓட்டுனர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீடு திட்டம், இதேபோல் எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு 50 ஆயிரம் உதவித்தொகை, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு தலா 10,000 காசோலை, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் போன்றவை வழங்கப்பட்டது, விஜயகாந்துக்கு 70 ஆவது அகவையில் அடியெடுத்து வைப்பதை குறிக்கும் வகையில் 70 பேர் ரத்த தானம் இன்று வழங்கினர்.

இதையும் படியுங்கள்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி திமுகவில் இணைகிறார்.. மாஸ்காட்டும் செந்தில் பாலாஜி.

முன்னாதக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரேமலதா விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர் கேப்டன் விஜயகாந்தின் ரத்தம் " O positive" இன்றைய ரத்த தானம் வழங்க வந்திருப்பவர்களில் ரத்தமும் "O positive" இதுதான் தலைவனுக்கும் தொண்டனுக்கும் இடையேயான பந்தம் என்றார், அப்போது அங்கிருந்த தொண்டர் ஒருவர்  தனக்கு be positive என்றால், அதைக்கேட்ட பிரேமலதா விஜயகாந்த் எனக்கும் " B Positive" ரத்தம் தான்,  இது ஜென்ம பந்தம், ரத்த பந்தம்  இதுதான் என்றார், தற்போது கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை நல்ல நிலையில் உள்ளது,

எனவே அவரது உடல்நிலை குறித்து யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம், விஜயகாந்த் உடல்நிலை குறித்து தொண்டர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம், விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நாளை தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு அவர் வர உள்ளார், தொண்டர்கள் அங்கு அவரை சந்திக்கலாம் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தமிழகத்தில் நடக்கும் அனைத்து மக்கள் பிரச்சினைகளுக்காகவும் தேமுதிக போராடி வருகிறது என்றார். 
 

click me!