அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி திமுகவில் இணைகிறார்.. மாஸ்காட்டும் செந்தில் பாலாஜி.

By Ezhilarasan BabuFirst Published Aug 24, 2022, 4:09 PM IST
Highlights

அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி இன்று பொள்ளாச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து. திமுகவில் இணைந்து மக்கள் பணியாற்ற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி இன்று பொள்ளாச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்து மக்கள் பணியாற்ற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதிலும் திமுக தனது செல்வாக்கை நிரூபித்து ஆட்சியை கைப்பற்றியறினாலும், கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் கோட்டையாகவே இருந்தது. இது திமுகவுக்கு பெரும் மனக்குறையாக இருந்தது, பின்னர் செந்தில் பாலாஜியை கொங்கு மண்டல பொறுப்பாளராக முதல்வர் ஸ்டாலின் களமிறக்கியதுடன், கொங்குவை திமுகாவின் கோட்டையாக்க உத்தரவிட்டார்.அதில் சுற்றிச் சுழன்று பணியாற்றிய செந்தில் பாலாஜி நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கொங்கு திமுகவின் கோட்டை என்பதை நிரூபித்தும் காட்டினார்.

தற்போது கட்சியை மேலும் பலப்படுத்துவதற்கான பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார், இந்நிலையில்தான் சுமார் 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அதில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் கோவை விரைந்துள்ளார். அவரை செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேற்று வரவேற்றனர், இன்று மாலை பொள்ளாச்சியில் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: அத்தைக்கு மீசை முளைக்கட்டும்..! அதிமுகவிற்கு தலைமை யார் என பின்னர் முடிவெடுப்போம்- டிடிவி தினகரன்

எப்போதும் செந்தில்பாலாஜி ஏற்பாடு செய்யும் கூட்டம் என்றால் அதில் பல அதிரடிகள் இருக்கும், பலரும் வாயடைக்கும் வகையில் சர்ப்ரைஸ் வைத்திருப்பார் செந்தில்பாலாஜி, நிச்சயம் பிற கட்சிகளில் இருந்து முக்கிய புள்ளிகளை தூக்கி வந்து கட்சியில் இணைய வைப்பது செந்தில் பாலாஜியின் டெரெண்ட்,  அவர், அந்த வகையில் இன்றைய கூட்டத்தில் யார் இணையப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஊடகங்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் இருந்து வந்தது. இது குறித்து நேற்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அவர் கூறுகையில், நாளை நடைபெறும் கூட்டத்தில் சந்திப்போம், அங்குவந்து யார் வருகிறார்கள் யார் யார் மேடையில் நிற்கிறார்கள் என்பதை பாருங்கள் என கூறியிருந்தார். 

இந்நிலையில்தான் திமுகவில் இணையப்போகும் அந்த முக்கிய புள்ளிகள் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறு குட்டி திமுகவில் இணைய உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து மக்கள் பணியாற்ற போவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆறு குட்டி கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2011, 2016 ஆகிய இரண்டும் சட்டமன்ற தேர்தல்களிலும் போட்டியிட்டு தொடர்ந்து 2 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர் ஆவார். கோவை மாவட்டத்தில் திமுகவின் முக்கிய பிரமுகராக இருந்துவந்தார்.

இதையும் படியுங்கள்: அண்ணாமலை ஒரே பாட்டுல CM ஆகணுமா.? மாதம் 50 ஆயிரம் கொடுத்தா மாநிலப் பொறுப்பு... டாரா கிழித்த மைதிலி.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்தார், ஓபிஎஸ் இபிஎஸ்சின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்து வந்தார்.  இந்நிலையில்தான் திமுகவில் தன்னை இணைத்துக் கொள்ளப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் ஆறு குட்டி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகி மைதிலி வினோத் திமுகவில் இணைய உள்ளார்.

மேலும் அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏ மற்றும் முன்னாள் கோவை மேயரான செ. மா வேலுச்சாமி திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதேபோல் தேமுதிகவை சேர்ந்த சூலூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ தேமுதிக நிர்வாகி தினகரன் திமுகவின் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் செந்தில் பாலாஜி அதிமுக, பாஜக, தேமுதிகவுக்கு ஷாக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

click me!