ராஜாத்தி அம்மாளுக்கு உடல் நலக்குறைவு.. சிகிச்சைக்காக ஜெர்மனி செல்கிறார் கனிமொழி !

By Raghupati R  |  First Published Aug 24, 2022, 6:41 PM IST

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மனைவியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு ராஜாத்தி அம்மாள் மிகுந்த துயரத்துடன் இருந்ததாகவும், அதனால் அவர் சரியாக உணவு உட்கொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படும் நிலையில், அவருக்கு அவ்வப்போது உடல்சோர்வு, மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்பட்டது. 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..2 குழந்தைகளை அடித்தே கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட தாய்.. குடும்ப தகராறில் விபரீதம்

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக அவர் மருத்துவமனைக்கு சென்றும் அந்த மருத்துவமனையின் மருத்துவர்களை வீட்டிற்கு வரவழைத்தும் சிகிச்சை எடுத்து வருவதாகவும், மேலும் தற்போது அவர் உணவு எடுத்துக்கொள்வதில் சிரமங்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. 

அவர் திட உணவுகள் எதை சாப்பிட்டாலும் அவை செரிக்காமல் ஜீரண கோளாறு பிரச்னையை ஏற்படுத்தி வருவதாகவும், அதனால் அவர் பழச்சாறு, சூப் உள்ளிட்ட திரவ உணவுகளை மட்டுமே பிரதானமாக உட்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அவரால் சரிவர சாப்பிட முடியாத அளவுக்கு அஜீரண கோளாறு ஏற்பட்டது. வயிற்றுவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதால் அவ்வப்போது அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். 

மேலும் செய்திகளுக்கு..குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! ரேஷனில் இனி இலவச பொருட்கள் கிடையாது

ஆனாலும் அஜீரண கோளாறு தொடர்ந்து இருந்து வந்தது.  இதனால் ஜெர்மனி நாட்டில் உள்ள போர்ன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு ராஜாத்தி அம்மாளுக்கு அப்பல்லோ டாக்டர்கள் பரிந்துரைத்தனர். அதனை ஏற்று ராஜாத்தி அம்மாள் நாளை இரவு ஜெர்மனி புறப்பட்டு செல்கிறார். அவருடன் கனிமொழி எம்.பி., பேரன் ஆகியோரும் உடன் செல்கின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கு : முடியவே முடியாது.. எச்சரித்த நீதிமன்றம் - மீண்டும் பரபரப்பு

click me!