ஐடி ரெய்டு கேள்விகளை தவிர்க்க பத்திரிகையாளர்களை பார்த்ததும் ஓட்டம் பிடித்த அமைச்சர், கனிமொழி

By Velmurugan sFirst Published May 26, 2023, 8:48 PM IST
Highlights

தூத்துக்குடி மாநகராட்சியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி ஆகியோர் ஐடி ரெய்டு தொடர்பான கேள்விகளை தவிர்க்க ஓட்டம் பிடித்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். திமுகவில் பல்வேறு அமைச்சர்கள் இருந்தாலும் குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் மட்டுமே சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியில் தூத்துக்குடி மாநகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தை முடித்து கொண்டு வெளியோ வந்த அமைச்சர், கனிமொழியை சூழ்ந்து கொண்ட பத்திரிகையாளர்கள் வருமான வரித்துறை சோதனை குறித்து கேள்விகளை முன்வைக்க முற்பட்டனர். அப்போது அமைச்சர் கே என் நேரு , ஏங்க,  யூரின் போறது, வெளிய போறது, தண்ணி போறது, லைட்டு போடுறது, குடிசை கட்டுவது இத பத்தி மட்டும் என்கிட்ட கேளுங்க என்று கூறிவிட்டு வேக வேகமாக சென்றுவிட்டார்.

திருச்சியில் இருந்து குமரிக்கு காதலியை தேடி சென்ற பெண் விரட்டியடிப்பு

கனிமொழியிடம் இதுகுறித்து கேட்டதற்கு, எனக்கு தெரியாது. அமைச்சருக்கு லேட் ஆகிறது என்று புறப்பட்டு சென்றனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கனிமொழி எம்பி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஐடி ரெய்டுக்கு எதிராக போராடியவர்களுக்கு தயிர் பச்சடியுடன் பரிமாறப்பட்ட பிரியாணி

click me!