சிஎஸ்கே தான் கோப்பையை ஜெயிக்கணும்..! உண்மையான தல தோனி தான்- செல்லூர் ராஜு

By Ajmal KhanFirst Published May 26, 2023, 5:06 PM IST
Highlights

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே தான் ஜெயிக்கணும்,கோப்பையை வெல்லனும் என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நாம, தல- தல னு சொல்கிறோம் உண்மையான தலை  தோனி தான் என தெரிவித்துள்ளார்.

போட்டோ சூட் நடத்தும் ஸ்டாலின்

மதுரை மாவட்டம், பரவை அடுத்த ஊர்மெச்சிகுளம் பள்ளியில் புதிய வகுப்பறை அமைக்க பூமிபூஜை மற்றும் 12வது வார்டில் வடக்கு விரிவாக்க பகுதியில் பரவை கண்மாய் கால்வாயில் சிறு பாலம் கட்ட பூமிபூஜை விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூகலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர்,  பரவை பேரூராட்சியில் 57 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டிடம் கட்ட பூமி பூஜை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இப்பகுதியில் உள்ள கண்மாய் குடி மராமத்து செய்ததால்  3 ஆண்டுகள் தொடர்ச்சியாக தண்ணீர் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கி வருவதாக குறிப்பிட்டார்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளிநாடு சென்றிருப்பது தொழில் முதலீட்டுக்காக அல்ல, இன்ப சுற்றுலாவுக்காக  சென்றிருப்பதாக விமர்சித்தவர்,  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் விதமாக விதமாக டிரஸ் போட்டு வெளிநாட்டிற்கு சென்று ஒரு படத்தில நடத்திருப்பார். அதேபோல விதவிதமாக டிரஸ் போட்டு போட்டோவுக்கு ஸ்டாலின் போஸ் கொடுத்து வருவதாகவும் கூறினார்.  வெளிநாட்டு பயணத்தில் எந்த அளவிற்கு வெற்றி கிடைக்குமா? என தெரியவில்லை குறிப்பிட்டார்.

சோதனையை முன் கூட்டியே நடத்திருக்கணும்

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு வருமானவரித்துறை ரெய்டுக்கு போன வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக கேள்விக்கு பதில் அளித்த அவர், திமுக என்றாலே வன்முறைக்கு பெயர் போன கட்சி. வருமானவரித்துறை ரெய்டை முன்கூட்டியே செய்திருந்தால் விஷசாராயத்தால் இவ்வளவு உயிர் போயிருக்காது என தெரிவித்தார். முதல்வர் கிழக்கத்திய நாடுகளுக்கு சென்றிருப்பது முதலீடுகளை ஈர்ப்பதற்காகல்ல. முதலீடு செய்வதற்காக தான் சென்றிருப்பார். அதனால கூட ரெய்டு நடந்திருக்கலாம். இது குறித்து  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார், இதற்கு முன்னாடி வெளிநாடு பயணம்  சென்று  என்ன தொழில் முதலீடுகளை  கொண்டு வந்தார் என கேள்வி எழுப்பியவர், இது விளம்பர அரசு தான் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


 
ஆறாக ஓடும் சாராயம்

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒரு சொட்டு மது கூட இருக்காதுன்னு சொன்னாங்க. இப்போ சாராய ஆறாக ஓடுது. கள்ள சாராயம் பெருக்கெடுத்து ஓடுது. பல உயிர்கள் பலியாகுது. திமுக அரசின் அவலங்களுக்கு இந்த கள்ளச் சாராயம் ஒரு எடுத்துக்காட்டு. கள்ளச்சாராயத்தால் செத்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவது தான் இந்த திமுக ஆட்சியின் அவலம் என செல்லூர் ராஜு குற்றம் சாட்டினர்.

 

click me!