எம்.ஜி.ஆர். மேடையில் ஜெயக்குமார் துள்ளி குதித்தது ஏன்? அமைச்சர்களை அதிரவைத்த பின்னணி!

Published : Oct 01, 2018, 01:11 PM ISTUpdated : Oct 01, 2018, 01:21 PM IST
எம்.ஜி.ஆர். மேடையில் ஜெயக்குமார் துள்ளி குதித்தது ஏன்? அமைச்சர்களை அதிரவைத்த பின்னணி!

சுருக்கம்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா கொண்டாட்டங்களால் எம்.ஜி.ஆரின் ஆத்மா ஆனந்தப்படதோ இல்லையோ, அதன் நிறைவு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் ஏக உற்சாகத்தை அடைந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா கொண்டாட்டங்களால் எம்.ஜி.ஆரின் ஆத்மா ஆனந்தப்படதோ இல்லையோ, அதன் நிறைவு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் ஏக உற்சாகத்தை அடைந்திருக்கிறார். அவரது குபீர் குஷியை கண்டு முதவ்லர் எடப்பாடியே அதிர்ந்து போனதுதான் ஹைலைட்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடந்தது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டம். அந்தந்த மாவட்ட செயலாளர்கள், அம்மாவட்ட அமைச்சர்கள் அதனை முன்னின்று நடத்தினர். 

ஒருவழியாக இறுதி விழாவை எட்டி, சென்னையில் நேற்று அது முடிந்தது. சென்னை விழா ஏற்பாட்டில் அமைச்சர் ஜெயக்குமாரின் கை மிகப்பெரிய அளவில் இருந்தது. நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்வதில் துவங்கி, ஆட்களை கொண்டு வந்து சேர்ப்பது வரை எல்லாமே கெத்தாக இருக்க வேண்டுமென நினைத்தார். 

பல மாவட்டங்களில் இருந்தும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இலவசமாக இயக்கப்பட, கணிசமான கூட்டம் வந்து குவிந்தது. இதனால் ஜெயக்குமாருக்கு ஏக குஷி. அவரால் தன் சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியவில்லை போலும், அதனால் கபாலென விழா மேடையிலிருந்து அருகிலிருந்த கலைநிகழ்ச்சிகள் மேடைக்கு தாவினார். மைக்கை பிடித்தவர், அங்கே இசைக்கலைஞர்களுடன் இணைந்து ’நாங்க புதுசாஆஆஆஆ....’ என்று இழூத்து அவர் எம்.ஜி.ஆர். பாடலை பாட ஆரம்பிக்க அமைச்சர்களே கைதட்டி கலகலத்தனர். அதே உற்சாகத்தில், அழகிய தமிழ் மகள் இவள்...என்று பொளந்து கட்டினார் ஹைபிட்சில். 

இசை ஆளுமை பி.சுசீலாவுடன் இணைந்து பாடுகையில், எஸ்.பி.பாலசுப்ரமணியமே மிக அலர்ட்டாக இருப்பார். ஆனால் நேற்று சுசீலாவுடன் இணைந்து எந்த ஜெர்க்குமில்லாமல் பாடினார் ஜெயக்குமார். ‘பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ?’ என்று புரட்சித்தலைவரின் துள்ளல் இசைப்பாடலை ஜெயக்குமார் பாடியபோது விழா ஆர்ப்பரித்தது. 

‘நான் தப்பா பாடினா மன்னிச்சுடுங்கம்மா!’ என்று குமார் பம்ம, ‘நோ! நீங்க நல்லாதான் பாடுறீங்க!’ என்று சுசீலா பாராட்ட, அமைச்சருக்கு உச்சி குளிர்ந்துபோனது. 

அத்தோடு விட்டாரா? நிகழ்ச்சி மேடையில் மைக் பிடித்தவர் ஸ்டாலின், தினகரன், ரஜினி, கமல் என எல்லோரையும் வெளுத்துக்கட்டி விளாசி தள்ளினார் சகட்டுமேனிக்கு. 

குறிப்பாக “மாஃபியா கலாசாரத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தது மன்னார்குடி குடும்பம்தான். அம்மா முன் நடித்து ஊரை ஏமாற்றிய நயவஞ்சகர்கள் கூட்டத்தில் இருந்து வந்த ஓநாய் ஊளையிடுகிறது” என்று தினகரனை கொத்தி தின்று பேசினார். 
ஜெயக்குமார் இந்தளவுக்கு  இந்த நிகழ்வில் துள்ளல் காட்டிட முக்கிய காரணம் என்ன? என்று அமைச்சர்கள் தங்களுக்குள் அலசிக்கொண்டனர். அதற்கு கிடைத்த ஒரே விடை இதுதான்...

”சில வாரங்களுக்கு முன் அமைச்சர் ஜெயக்குமாருக்கு, கழக அவைத்தலைவர் மதுசூதனனுடன் பெரிய உரசல் ஏற்பட்டது. அமைச்சரின் வண்டவாளங்களை மீடியா முன் போட்டுடைத்து பேட்டி கொடுத்தே தீருவேன்! என்று மைக் கட்டிக் கொண்டு நின்றார் மதுசூதனன். பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு அவரை சமாதானம் செய்தார். 

நொடி பிசகியிருந்தாலும் கூட மதுசூதனனால் ஜெயக்குமாரின் பெயர் பெரிய சேதாரத்தை சந்தித்திருக்கும் அன்று. இதில் ஜெயக்குமார் ஏக அப்செட். இதன் பின்னணியில் ஓ.பி.எஸ். இருக்கிறார் என்பது ஜெயக்குமாரின் சந்தேகம். ஆனாலும் தக்க சமயத்தில் கைகொடுத்து எடப்பாடியார் உதவியதில் நெகிழ்ந்துவிட்டார் அமைச்சர். 

ஆக மது, பன்னீர் இரண்டுபேருக்கும் ‘நான் எதற்கும் அஞ்சமாட்டேன்! ஏக உற்சாகத்தில் இருக்கிறேன். சென்னை என்னோட கோட்டை’ என்று காண்பிப்பதற்காகவே ஜெயக்குமார் இப்படி துள்ளல் காட்டினார்.” என்பதுதான். 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!