
பார்ப்பவர்களின் கண்ணில் கோளாறு இருப்பதால்தான் சிவப்பு நிறம் கூட காவி நிறமாகத் தெரிகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாகக் கூறினார்.
டெங்கு ஒழிப்பு தினக் கூட்டத்தில் இருந்தது காவி நிறத்தில் அமைக்கப்பட்ட பேனர் அல்ல; அது சிவப்பு நிற பேனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் விக்கமளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பார்ப்பவர்கள் கண்ணில் கோளாறு இருப்பதால்தான் சிவப்பு நிறம் கூட காவி நிறமாகத் தெரிகிறது என காட்டமாகக் கூறினார்.
முன்னதாக நேற்று டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சியில் வைக்ககப்பபட்ட பேனர் காவி நிறத்தில் வைக்கப் பட்டதாக செய்தி பரவியது.
மேலும் இன்னும் 2 வார காலத்துக்குள் இலங்கை கடற்படை வசமுள்ள மீனவர்களின் படகுகள் தமிழகம் கொண்டுவரப்படும் என கூறிய ஜெயக்குமார் மீனவர் உதவித்தொகை, மீனவ பெண்களின் சேமிப்புத் தொகை ஆகியவை தீீபாவளிக்கு முன்னதாகவே வழங்கப்படும் என்று கூறினார்.