புதிய கவர்னருக்கு டி.டி.வி.தினகரன் வாழ்த்து !!   ஆளுநரை சந்திக்கவும்  திட்டம் !!!

 
Published : Oct 06, 2017, 10:33 AM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
புதிய கவர்னருக்கு டி.டி.வி.தினகரன் வாழ்த்து !!   ஆளுநரை சந்திக்கவும்  திட்டம் !!!

சுருக்கம்

ttv dinakaran congrats new governer

தமிழகத்தின் புதிய ஆளுநராக  இன்று பொறுப்பேற்றுக் கொண்ட பன்வாரிலால் புரோகித்துக்கு, அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து  தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா  மறைவுக்கு முன் தமிழக கவர்னராக இருந்த ரோசய்யா ஓய்வு பெற்றதையடுத்த மகாராஷ்ட்ரா கவர்னர் வித்யா சாகர் ராவ் தமிழகத்தைன் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து ஜெயலலிதா மரணம், அதில் ஏற்பட்ட சர்ச்சை, அதிமுகவுக்குள் குழப்பம் என பல பல நெருக்கடிகளை வித்யாசாகர் ராவ் சந்தித்து வந்தார். 

முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டி.டி.வி.தினகரன் களம் இறங்கி தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேருடன் ஆளுநரை சந்தித்த அவர் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என கடிதம் அளித்தார்.

ஆனால் தினகரனின் வேண்டுகோளை , வித்யாசாகர் ராவ்  நிராகரித்தார்.பின்னர் இப்பிரச்சனை நீதிமன்றத்துக் சென்று விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்துக்கு பன்வாரிலால் புரோகித் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டு இன்று அவர் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் , தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள  பன்வாரிலால் புரோகித்துக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஆளுநர் பன்வாரிலாலை தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன்  சென்று சந்திக்க திட்டமிட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..